வீடியோ : அற்புதமான கேட்ச்சால் அதிர்ந்த விராட் கோலி – முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தடுமாறும் இந்தியா

Virat Kohli Catch
- Advertisement -

நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வங்கதேசம் சென்றுள்ள இந்தியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. 2023இல் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய முதன்மை இந்திய அணி களமிறங்கியுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதியன்று தாக்கா நகரில் துவங்கிய இத்தொடரின் முதல் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் குல்தீப் சென் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்ற நிலையில் வாஷிங்டன் சுந்தர், சபாஸ் அஹமத், தீபக் சஹர், ஷார்துல் தாகூர் உள்ளிட்ட 4 ஆல் ரவுண்டர்கள் இடம் பிடிப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா அறிவித்தார்.

அதை விட சுமாராக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டு விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் துணை செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பேட்டிங்கை துவக்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே தடவலை போட்ட சிகர் தவான் 7 (17) ரன்களில் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் ரோகித் சர்மா சரிவை சரி செய்வதற்காக மெதுவாக விளையாடிய நிலையில் சாகிப் அல் ஹசன் வீசிய 11வது ஓவரின் 3வது பந்தில் 4 பவுண்டரியுடன் 27 ரன்கள் எடுத்திருந்த போது போல்டாகி சென்றார்.

- Advertisement -

அதிர்ந்த கோலி:
அடுத்த சில பந்துகளில் அதிரடியாக விளையாட முயற்சித்து விராட் கோலி கொடுத்த அற்புதமான கேட்சை ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டிருந்த வங்கதேச கேப்டன் லிட்டன் டாஸ் பாய்ந்து தாவி பிடித்தார். அதனால் வியப்பில் ஒரு சில நொடிகள் அதிர்ச்சியுடன் என்ற விராட் கோலி 9 (15) ரன்களில் ஏமாற்றுத்துடன் பெவிலியன் திரும்பினார். 2019க்குப்பின் சதம் அடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த அவர் ஆசிய கோப்பையில் சதமடித்து நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை அதிக ரன்கள் குவித்து அற்புதமான பார்மில் உள்ளார்.

அப்படிப்பட்ட அவர் இப்போட்டியில் முக்கிய நேரத்தில் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானது இந்தியாவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதனால் 49/3 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்று தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஷ்ரேயஸ் ஐயர் – கேஎல் ராகுல் ஆகியோர் நங்கூரத்தை போட்டு மெதுவான பேட்டிங்கை வெளிப்படுத்தி காப்பாற்ற போராடினார்கள். இருப்பினும் 43 ரன்கள் மட்டுமே பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்த அந்த ஜோடியை ஷ்ரேயஸ் ஐயரை 24 (39) ரன்களில் அவுட்டாக்கி எபோதத் ஹொசைன் பிரித்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ராகுல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்தியாவை மீட்டெடுத்து வரும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் சற்று முன் வரை இந்தியா 32 ஓவரில் 152/4 ரன்கள் எடுத்துள்ளது. இப்போட்டி நடைபெற்று வரும் ஷேர்-ஈ-பங்ளா மைதானம் பேட்டிங்க்கு கடும் சவாலாகவும் பந்து வீச்சுக்கு அதிக சாதகமாகவும் இருப்பதாலேயே இந்திய பேட்ஸ்மேன்கள் இவ்வாறு தடுமாறுகிறார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக 10வது ஓவரிலேயே பிட்ச் அதிகப்படியான சுழலுக்கு கை கொடுக்க ஆரம்பித்து விட்டதால் 250+ ரன்களை எப்படியாவது இந்தியா எடுக்க வேண்டியது கட்டாயமாகிறது. அப்படி செய்து விட்டால் இந்திய அணியிலும் இருக்கும் தரமான சுழல் பந்து வீச்சாளர்கள் நிச்சயம் வங்கதேச ஸ்பின்னர்களை பார்த்து அதே மைதானத்தில் அவர்களுக்கு சவாலை கொடுத்து இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்று உறுதியாக நம்பலாம்.

Advertisement