இவரையா நாம திட்டினோம், ஒற்றை கையால் வெற்றியை தலைகீழாக மாற்றிய ராகுலை பாராட்டும் ரசிகர்கள்

KL rahul Run Out
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் அனல் பறக்க நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்தை அடுத்தடுத்து தோற்கடித்து வெற்றி நடை போட்ட இந்தியா தென்னாபிரிக்காவிடம் தோற்று ஹாட்ரிக் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டதுடன் செமி பைனலுக்கு செல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அந்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதியன்று புகழ்பெற்ற அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் வங்கதேசத்தை தன்னுடைய 4வது போட்டியில் எதிர்கொண்ட இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 184/6 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் கேஎல் ராகுல் அதிரடியாக 3 பவுண்டரி 4 சிக்ஸருடன் 50 (32) ரன்களும் விராட் கோலி 8 பவுண்டரி 1 சிக்சருடன் 64* (44) ரன்களும் எடுத்தனர். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 185 ரன்களை துரத்திய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களில் இந்திய பவுலர்களை அடித்து நோக்கிய லிட்டன் தாஸ் வெறும் 21 பந்துகளில் அரைசதம் கடந்ததால் 7 ஓவர்களிலேயே வங்கதேசம் 66/0 ரன்கள் எடுத்தது. அந்த சமயம் பார்த்து மழை வந்த போது டக்வோர்த் லீவ்ஸ் முறைப்படி வங்கதேசம் 17 முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர்.

- Advertisement -

இவரையா திட்டினோம்:
சுமார் அரை மணி நேரம் மழை பெய்து கொண்டிருக்கையில் இப்போட்டியில் தோற்றால் நிலைமை என்னவாகும், இந்தியா செமி பைனல் செல்ல என்ன செய்ய வேண்டும் என்ற கணக்கீடுகளை இந்திய ரசிகர்கள் செய்யத் துவங்கினர். அப்போது அதிர்ஷ்டமாக நின்ற மழையால் 16 ஓவர்களில் வங்கதேசம் வெற்றி பெற 151 ரன்கள் என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் 7 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (27) ரன்கள் எடுத்து மிரட்டிய லிட்டன் தாஸ் ரவிச்சந்திரன் அஸ்வின் வீசிய 8வது ஓவரின் ஒரு பந்தில் எதிர்புறமிறந்த சாண்டோ 2 ரன்களை எடுக்க அழைத்ததால் வேகமாய் ஓடினார்.

ஆனால் முதல் ரன்னை எடுத்து திரும்பும் போது பின்னடைவை சந்தித்த அவர் 2வது ரன்னை முடிப்பதற்குள் பந்தை கையில் எடுத்த கேஎல் ராகுல் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை குறி பார்த்து எரிந்து நேரடியாக ரன் அவுட் செய்தார். அதனால் போட்டியில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்பட்டது போல் அடுத்ததாக வந்த சாகிப் அல் ஹசன் 13 (12) அபிப் ஹொசைன் 3 (5) யாசிர் அலி 1 (3) மொசாதிக் ஹொசைன் 6 (3) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து சொற்ப ரன்களில் அவுட் செய்த இந்தியா அபார கம்பேக் கொடுத்தது.

- Advertisement -

ஆனாலும் இறுதியில் நூருல் ஹாசைன் 25* (14) ரன்கள் எடுத்து மிரட்டியதால் வெற்றியை நெருங்கிய வங்கதேசத்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது. அந்த ஓவரில் சற்று தடுமாறினாலும் 14 ரன்கள் மட்டுமே கொடுத்த அரஷ்தீப் சிங் இந்தியாவை வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அவரும் ஹர்திக் பாண்டியாவும் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றியால் குரூப் 1 புள்ளி பட்டியலில் 4 போட்டிகளில் 3 வெற்றியுடன் 6 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்த இந்தியா அரை இறுதி சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு 64 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய விராட் கோலி ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டாலும் மழை பெய்து ஓய்ந்த பின் இந்தியா அபார கம்பேக் கொடுப்பதற்கு லிட்டன் தாஸை ரன் அவுட் செய்து மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய கேஎல் ராகுல் அறிவிக்கப்படாத ஆட்டநாயகனாக செயல்பட்டார். ஏனெனில் பேட்டிங்கிலும் அதிரடியாக 50 ரன்களை குவித்த அவர் சமீப காலங்களில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் நிறைய ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் இப்போட்டியில் பேட்டிங்கிலும் பீல்டிங் துறையிலும் அபாரமாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட அவர் “இவரையா திட்டினோம்” என்று ரசிகர்கள் தம்மை பாராட்டும் அளவுக்கு அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement