எதிர்பாரா வகையில் நேரலை பயிற்சியின் போது முன்னாள் தமிழக வீரரை பேட்டால் அடித்த ஸ்ரீகாந்த் – பதபதக்கும் முழுவிவரம் இதோ

Srikanth
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியுள்ள 2022 ஆசிய கோப்பை தொடரின் கோப்பையை வெல்வதற்கு நடப்புச் சாம்பியன் இந்தியா உட்பட ஆசியாவின் டாப் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இந்த தொடரில் ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று துவங்கிய 2வது போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அதற்கு முன்பாக இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கையை பந்தாடிய ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியான வெற்றியை பதிவு செய்தது.

நேரலையில் பரிதாபம்:
துபாயில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கையை வெறும் 105 ரன்களுக்கு சுருட்டிய ஆப்கானிஸ்தான் அதை வெறும் 10.1 ஓவரில் அசால்டாக சேஸிங் செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. முன்னதாக இந்த ஆசிய கோப்பையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் இந்தியா முழுவதும் நேரலையாக தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் தனித்தனியான சேனல்களில் ஒளிபரப்பி வருகிறது. அந்த ஒவ்வொரு சேனலிலும் அந்தந்த மாநிலங்களை சேர்ந்த நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வல்லுனர்களும் வர்ணனையாளர்களாக செயல்பட்டு ரசிகர்களுக்கு செய்திகளையும் வியூகங்களையும் புள்ளி விவரங்களையும் கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் தொலைகாட்சி சேனலில் 1983 உலக கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியில் அதிரடி தொடக்க வீரராக விளையாடிய முன்னாள் ஜாம்பவான் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், 90களின் இறுதியில் தொடக்க வீரராக விளையாடிய சடகோபன் ரமேஷ், சுப்ரமணியம் பத்ரிநாத், லட்சுமிபதி பாலாஜி போன்ற முன்னாள் வீரர்கள் கடந்த பல வருடங்களாக வர்ணனையாளர்களாகவும் வல்லுனர்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

அந்த நிலைமையில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதிய முதல் ஆசிய கோப்பை போட்டி துவங்குவதற்கு முன்பாக அந்த போட்டியின் புள்ளி விவரங்கள் மற்றும் குறிப்பிட்ட வீரரை எப்படி சமாளிப்பது என்பது போன்ற விவரங்களை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நேரலையில் விவரித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக இலங்கையின் பானுகா ராஜபக்சே எப்படி அடிப்பார் என்று செய்து காட்டிய அவர் பேட்டை வலுவாக சுழற்றினார்.

- Advertisement -

அப்போது எதிர்பாராத வகையில் அவரது பேட் அருகில் இருந்த மற்றொரு தமிழக முன்னாள் வீரர் ஹேமங் பதானியின் முழங்கையில் வலுவாக பட்டது. அதனால் துடித்த அவர் ஹயையோ என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓருசில அடிகள் நகர்ந்து ஓடினார். முதலில் லேசாக பட்டதை போல் தெரிந்ததால் அனைவருமே சகஜமாக சிரித்து பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் வலியால் துடித்த ஹேமங் பதானி ஒரு சில வினாடிகள் தனது கையை அழுத்திக்கொண்டு வலியுடன் நின்ற நிலையில் அடுத்த சில நொடிகளில் வலியை தாங்க முடியாமல் நேரலை நிகழ்ச்சியிலிருந்து விலகிச் சென்றார்.

மறுபுறம் தொடர்ந்து ஜாலியாக பேசிக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த் அதை கவனித்தபோது “என்னப்பா வலிக்குதா, சாரி டா டேய்” என்று நேரலையில் மன்னிப்பு கேட்டார். மேலும் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த முத்து நிகழ்ச்சி நிர்வாகிகள் அவரை சோதித்து முதலுதவி கொடுப்பார் என்று கூறினார். ஆனால் இப்படி விளையாட்டாக அடிக்கப் போய் வலுவான அடி வாங்கிய ஹேமங் பதானிக்கு என்னவாயிற்று என்று அதை நேரலையில் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் பதறிப் போனார்கள்.

அதனால் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ச்சியாக என்னவாயிற்று என்று நேற்று முதல் ரசிகர்கள் கேட்கத் தொடங்கினார்கள். அதற்கு பதிலளித்த ஹேமங் பதானி அந்த அடி வலுவாக இருந்தாலும் நல்ல வேளையாக எலும்பு முறிவு எதுவும் ஆகவில்லை என்று கூறி ரசிகர்களை நிம்மதியடைய வைத்துள்ளார். அதிலிருந்து குணம்டைந்து வருவதாக தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டது பின்வருமாறு.

“நான் எப்படி இருக்கிறேன் என்று அனைவரும் விசாரிக்கின்றனர். தற்போது நான் பயங்கரமான வலியில் இருக்கிறேன். ஆனால் அதிர்ஷ்டவசமாக எலும்பு முறிவு ஏற்படவில்லை. அதன் அப்பட்டமான அதிர்ச்சியுடன் மற்றும் மருந்துகளை எடுத்து வருகிறேன். விரைவில் குணமடைந்து படப்பிடிப்புக்கு வருவேன் என நம்புகிறேன்” என்று கூறினார். நல்லவேளையாக காயமும் பெரிய அளவில் ஏற்படாததால் மருந்துகளை எடுத்துக் கொண்டு இந்தியா பாகிஸ்தான் மோதிய 2வது போட்டியில் அவர் வர்ணனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement