முன்கூட்டியே கொண்டாடிய ஜெய் ஷா – ட்விஸ்ட் வைத்து சென்னைக்காக அதன் கோட்டையில் சாய்த்த குஜராத்தின் ஜடேஜா

- Advertisement -

உச்சகட்ட பரபரப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து ஐபிஎல் 2023 டி20 தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்று வெற்றிகரமான அணியாக மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்தது. அகமதாபாத் நகரில் ரிசர்வ் நாளில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 214/4 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 96 (47) ரன்கள் எடுக்க சென்னை சார்பில் அதிகபட்சமாக பதிரனா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து மழையால் 15 ஓவரில் 171 ரன்கள் தேவை என்ற இலக்கை துரத்திய சென்னைக்கு 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த தொடக்க வீரர்கள் ருதுராஜ் கைக்வாட் 26 (16) ரன்களும் டேவோன் கான்வே 47 (25) ரன்களும் எடுக்க மிடில் ஆர்டரில் சிவம் துபே 32* (21) ரகானே 27 (13) ராயுடு 19 (8) என முக்கிய வீரர்கள் முக்கியமான ரன்களை சரவெடியாக விளையாடி எடுத்தனர். அதனால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு மோஹித் சர்மா வீசிய கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது.

- Advertisement -

ஜெய் ஷா – ஜடேஜா ஆட்டம்:
அப்போது மிகவும் துல்லியமாக யார்கர் பந்துகளை வீசிய மோஹித் சர்மாவுக்கு பதில் சொல்ல முடியாத துபேவும் ஜடேஜாவும் முதல் 4 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்ததால் குஜராத் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த சமயத்தில் மைதானத்தில் அமர்ந்திருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா குஜராத் நிச்சயமாக சென்னையை மண்ணை கவ்வ வைத்து கோப்பையை வெல்லும் என்று அருகே அமர்ந்திருந்த தமது நண்பரிடம் இந்தி மொழியில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆபாசமான செய்கையை செய்து காட்டி முன்கூட்டியே வெற்றியை கொண்டாடினார்.

ஆனால் 5வது பந்தை ஒரு சில இன்ச்கள் மோகித் சர்மா தவற விட்டதை பயன்படுத்திய ஜடேஜா நேராக சிக்சரை பறக்க விட்டு கடைசிப் பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது ஃபைன் லெக் திசையில் பவுண்டரியை விளாசி 15* (9) ரன்களுடன் சென்னைக்கு த்ரில் பெற்றுக் கொடுத்தார். அதனால் மோஹித் சர்மா 5 விக்கெட்டுகளை எடுத்தும் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத்தை அதன் சொந்த ஊரில் கோட்டையாக இருக்கும் அகமதாபாத் மைதானத்தில் தோற்கடித்த சென்னை 5வது கோப்பையை வென்றது.

- Advertisement -

முன்னதாக இந்தியாவை ஆட்சி செய்யும் தலைவர்களை கொண்ட குஜராத்தை சேர்ந்த பிரபல தலைவரின் மகனான ஜெய் ஷா கடந்த 2019இல் பிசிசிஐ செயலாளராக பொறுப்பேற்று 2வது முறையாக பதவி வகித்து வருகிறார். அதனால் அகமதாபாத் நகரில் உலகின் மிகப்பெரிய மைதானத்தை உருவாக்கியது உட்பட குஜராத்துக்கு நிறைய முன்னுரிமை வழங்கப்பட்டது வருகிறது. அத்துடன் கடந்த வருடம் குஜராத் தேர்தல் நடைபெற்றதால் அதற்கு முன்பாக ஃபைனலில் தங்களது சொந்த மண்ணில் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெல்ல வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்ததாக அப்போதே நிறைய ரசிகர்களும் சுப்பிரமணிய சுவாமி போன்ற அரசியல் தலைவர்களும் விமர்சித்தனர்.

அந்த வரிசையில் இந்த போட்டியிலும் குஜராத் வெல்லும் என்பதில் உறுதியாக இருந்த காரணத்தாலேயே கடைசி நேரத்தில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே வங்கதேச வீரர்களை போல அதுவும் ஆபாசமான செய்கையை காட்டி அவர் கொண்டாடியதாக நிறைய ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர் எழுதிய ஸ்கிரிப்டில் கடைசியில் ட்விஸ்ட் போல அதே குஜராத்தில் பிறந்த ரவீந்திர ஜடேஜா தமிழக மண்ணை பிரதிபலிக்கும் சென்னைக்காக குஜராத்தை அதன் ஊரில் இருக்கும் கோட்டையான அகமதாபாத் மைதானத்தில் மகத்தான ஃபினிஷிங் செய்து தோற்கடித்து தமிழக ரசிகர்களை தலை நிமிர வைத்ததாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க:என்னது தோனி கடைசி 2 பந்தை பாக்காம குனிந்து இருந்தாரா? உண்மை என்ன தெரியுமா? – வெளியான வீடியோ ஆதாரம் இதோ

சொல்லப்போனால் குஜராத்தில் பிறந்த தாம் சென்னை ரசிகர்களுக்காக இந்த வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக ஜடேஜாவை போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அத்துடன் பிசிசிஐ செயலாளராக இருக்கும் ஜெய் ஷா பொதுவெளியில் இப்படி நடந்து கொண்டதற்கு நிறைய எதிர்ப்புகளும் காணப்படுகின்றது.

Advertisement