என்னது தோனி கடைசி 2 பந்தை பாக்காம குனிந்து இருந்தாரா? உண்மை என்ன தெரியுமா? – வெளியான வீடியோ ஆதாரம் இதோ

Dhoni-and-Jadeja
- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான நடப்பு ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியானது நேற்று இரவு நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சி.எஸ்.கே அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இந்நிலையில் இந்த போட்டியின் கடைசி 2 பந்தில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் அனைவருமே சி.எஸ்.கே அணி எப்படி வெற்றிபெறும் என்ற பதட்டத்தில் இருந்தனர். அந்த வேளையில் வீரர்களின் டக் அவுட்டில் இருந்த தோனியும் பதட்டத்தை தாங்க முடியாமல் கீழே குனிந்த படி அமர்ந்திருந்தார்.

- Advertisement -

தொலைக்காட்சியிலும் தோனி குனிந்த படி இருந்தபடியே ஒளிபரப்பானது. தமிழ் கமெண்டரியில் கூட தோனி பந்தை பார்க்காமல் குனிந்த படி இருக்கிறார் என்றே கூறப்பட்டது. ஆனால் எப்போதுமே தோனி பிரஷரான சூழ்நிலைகளிலும் அமைதி காப்பவர் என்பது நாம் அறிந்ததே. அந்தவகையில் நேற்றும் அவர் எந்தவொரு இடத்திலும் பதட்டம் அடையவில்லை.

கடைசி 2 பந்தையும் தோனி பார்த்தபடி தான் அமர்ந்திருந்தார். ஆனால் தொலைக்காட்சி ஒளிபரப்பில் ஏற்பட்ட பிழை காரணமாகவே அவர் குனிந்து இருந்ததாக தெரிந்தது. முதலில் காட்டப்பட்ட வீடியோ கோணத்தில் தோனி குனிந்தபடி இருந்தது உண்மைதான். ஆனால் அதன்பிறகு போட்டியை காண ஆரம்பித்துவிட்டார். ஆனால் தொலைக்காட்சியில் தொடர்ந்து தோனி குனிந்தபடியே காண்பிக்கப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் தோனி பிரஷசரால் குனிந்த படி அமரவில்லை என்பதும் போட்டியை இறுதிவரை வீரர்களுடன் அமர்ந்து உன்னிப்பாக பார்த்துக்கொண்டிருந்தார் என்பதையும் உறுதி செய்யும் விதமாக சென்னை அணியின் நிர்வாகம் அவர்களது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஒரு விடீயோவினை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவேகமாக வைரலாகி வருவது குறுப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வீடியோ : கண்ணீருடன் விடைபெற்ற ராயுடு – கடைசி போட்டியில் மாஸ் பேட்டிங், ரோஹித் சர்மாவின் மாஸ் சாதனை சமன்

இந்த போட்டியில் கடைசி பந்தினை பவுண்டரி விளாசிய ஜடேஜா நேரடியாக தோனியை நோக்கியே ஓடி வந்தார். அப்போது நம்ப முடியாத இந்த வெற்றியால் கண் கலங்கியிருந்த தோனி அப்படியே ஜடேஜாவை கட்டி தூக்கி அழுகையுடன் தனது மகிழ்ச்சியை அவருடன் பகிர்ந்து கொண்டார் அந்த விடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement