யார்கரால் மேக்ஸ்வெலை போல்டாக்கிய பும்ரா.. ஸ்மித்தை காலி செய்த சிராஜ், 400க்கு அஸ்திவாரம் போட்ட ஆஸி, அடக்கிய இந்தியா

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் ஆஸ்திரேலியா முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஆரம்பத்திலேயே கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவி விட்டது. அந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி ராஜ்கோட் நகரில் மதியம் 1.30 மணிக்கு துவங்கிய கடைசி போட்டியில் ஒய்ட்வாஷ் செய்யும் முறைப்புடன் களமிறங்கிய அந்த அணிக்கு கேப்டன் கமின்ஸ், மேக்ஸ்வெல், ஸ்டார்க் ஆகிய முக்கிய வீரர்கள் திரும்பினார்கள்.

அதன் பின் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அதிரடியாக விளையாடிய டேவிட் வார்னர் 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 6 பவுண்டரி 4 சிக்சருடன் 56 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் வந்த ஸ்டீவ் ஸ்மித்தும் அதிரடியாக விளையாடினார்.

- Advertisement -

அதை விட மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடி காட்டிய மற்றொரு துவக்க வீரர் மிட்சேல் மார்ஷ் வேகமாக ரன்களை குவித்து 2வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 பவுண்டரி 3 சிக்சருடன் 96 (84) ரன்களில் இருந்த போது குல்தீப் யாதவ் சுழலில் சிக்கிய அவரை தொடர்ந்த மறுபுறம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 74 (61) ரன்கள் குவித்து சவாலை கொடுத்த ஸ்மித்தை சரியான நேரத்தில் எல்பிடபுள்யூ முறையில் காலி செய்த சிராஜ் தம்மை நம்பர் ஒன் பவுலர் என்பதை நிரூபித்தார்.

அந்த நிலைமையில் புதிதாக வந்த அலெக்ஸ் கேரியை அடுத்த சில ஓவர்களில் 11 (19) ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா காயத்திலிருந்து கம்பேக் கொடுத்த கிளன் மேக்ஸ்வெலை 5 (7) ரன்களில் தம்முடைய துல்லியமான யார்கர் கிளீன் போல்டாக்கிய ஆஸ்திரேலியாவுக்கு பெரிய அடியை கொடுத்தார். அதே போல மறுபுறம் மார்னஸ் லபுஸ்ஷேன் அரை சதம் கடந்து சவாலை கொடுத்த போது 72 (58) ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா ஆஸ்திரேலியா 400 ரன்களை தொடவிடாமல் தடுத்தார்.

- Advertisement -

இறுதியில் 50 ஓவர்களில் ஆஸ்திரேலியா 352/7 எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக பும்ரா 3 விக்கெட்களும் குல்தீப் 2 விக்கெட்களும் எடுத்தனர். அந்த வகையில் இந்த போட்டியில் வார்னர், ஸ்மித், மார்ஷ் ஆகிய 3 டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடியதால் ஒரு கட்டத்தில் 31 ஓவரில் 242/2 என்ற நல்ல துவக்கத்தை பெற்றிருந்த ஆஸ்திரேலியா 400 ரன்கள் குவிப்பதற்கான அடித்தளத்தை பெற்றது.

ஆனாலும் மிடில் மற்றும் டெத் ஓவர்களில் சிறப்பாக செயல்பட்ட இந்திய பவுலர்கள் 352 ரன்களுக்கு கட்டுப்படுத்தி உலகக்கோப்பைக்கு முன்பாக முன்னேற்றத்தை கண்டு வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement