ஆசிய கோப்பை நடைபெறும் மைதானத்தில் மீண்டும் புகுந்த பாம்பு – ரசிகர்கள் கவலை

snake in ground
- Advertisement -

இலங்கையில் நடைபெற்று வரும் 2023 லங்கா பிரீமியர் லீக் டி20 தொடர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. அதில் ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற 15வது லீக் போட்டியில் கண்டி ஃபால்கார்ன்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கண்டி 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 178/8 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக முகமது ஹாரிஸ் 81 (51) ரன்களும் பகார் ஜமான் 22 (17) ரன்களும் எடுக்க யாழ்ப்பாணம் சார்பில் அதிகபட்சமாக நுவான் துசாரா 3 விக்கெட்டுகளையும் தில்சான் மதுசங்கா துணித் வெல்லலெகே 2 விக்கெட்டுகளையும் சாத்தனார்.

அதை தொடர்ந்து 179 ரன்களை துரத்திய யாழ்ப்பாணம் அணிக்கு மதுசங்கா 8, ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 1, கிறிஸ் லின் 27, அசலங்கா 2 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 51/4 என ஆரம்பத்திலேயே சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் நட்சத்திர மூத்த வீரர் சோயப் மாலிக் நங்கூரமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் 24 (16) ரன்களிலும் கேப்டன் திசாரா பெரேரா அதிரடியாக 36 (20) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

மீண்டும் நுழைந்த பாம்பு:
அதனால் சோயப் மாலிக் 55* (37) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் யாழ்ப்பாணத்தை 170/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற கண்டி சார்பில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் 3 விக்கெட்டுகளும் நுவான் பிரதீப் 2 விக்கெட்களை சாய்த்தனர். அப்படி கொழும்புவில் இருக்கும் ஆர் பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் யாழ்ப்பாணம் சேசிங் செய்த போது கண்டி அணியை சேர்ந்த நட்சத்திர பவுலர் இசுறு உடானா ஃபீல்டிங் செய்வதற்காக தனது அணி கேப்டன் சொன்ன இடத்தை நோக்கி திரும்பி பார்க்காமல் பின்வாக்கில் நடந்த சென்றார்.

ஆனால் அப்போது திடீரென்று மைதானத்திற்குள் நுழைந்த பாம்பு அவரது அருகே சென்று கொண்டிருந்தது. அதை கவனிக்காமல் கூலாக பின்னோக்கி நடந்து சென்ற அவரிடம் களத்தில் தூரத்திலிருந்து பார்த்த யாரோ “அங்கே பாருய்யா பாம்பு” என்று சைகை கொடுத்தனர். அதன் காரணமாக பக்கவாட்டில் திரும்பிய அவர் சில அடிகள் தூரத்தில் சென்ற மிகப்பெரிய பாம்பை பார்த்து “எப்பா எவ்ளோ பெருசு” என்ற வகையில் ரியாக்சன் கொடுத்து திடுக்கிட்டு உறைந்து போய் தலையில் கை தலையில் கை வைத்து பின்னர் வாயில் கை வைத்து அப்படியே மைதானத்தில் அமர்ந்தார்.

- Advertisement -

இருப்பினும் தாமதிக்காமல் உடனடியாக அங்கிருந்து எழுந்த அவர் பாம்பு அதனுடைய ரூட்டில் விட்டு எந்த தொந்தரவும் செய்யாமல் மீண்டும் பின்னோக்கி நடந்து ஃபீல்டிங் செய்வதற்காக சென்றார். அதைத்தொடர்ந்து மெதுவாக அங்கிருந்து சென்ற பாம்பு மைதானத்திற்கு வெளியே சென்றதால் 5 முதல் 10 நிமிடங்கள் வரை அந்த போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மலை காடுகள் நிறைந்த தீவு நாடான இலங்கையில் பாம்புகள் நடமாடுவது சகஜம் என்றாலும் இதே தொடரின் 2வது லீக் போட்டியில் இதே போல ஒரு பெரிய பாம்பு வந்தது.

அதை தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பார்த்து கிண்டலடித்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு வார இடைவெளிக்குள் பாம்பு இலங்கை பிரீமியர் லீக் தொடரில் புகுந்துள்ளது. அவை அனைத்தையும் விட இப்போட்டி நடைபெறும் பிரேமதாசா மைதானத்தில் இன்னும் சில வாரங்களில் 2023 ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அந்த சூழ்நிலையில் 2 வாரத்திற்குள் 2 முறை பாம்பு வந்து சென்றுள்ளது அந்த மைதானத்தில் விளையாடும் வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் கவலையை பயத்தையும் ஏற்படுத்துவதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement