தோனி போலவே வெகுதூரம் ஓடி அபார கேட்ச் பிடித்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த இஷான் கிசான்

- Advertisement -

2023 ஆங்கில புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் இந்தியா களமிறக்கியுள்ளது. அதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் நிலையில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி விளையாடுகிறது. அந்த நிலையில் ஜனவரி 3ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 162/5 ரன்கள் சேர்த்தது.

இந்தியாவுக்கு அறிமுகமாக களமிறங்கிய இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (5), சூரியகுமார் யாதவ் 7 (10), சஞ்சு சாம்சன் 5 (6) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தனர். மேலும் மறுபுறம் அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிசான் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 (29) ரன்கள் குவித்து அவுட்டான அடுத்த சில ஓவர்களில் அவருடன் கேப்டன் பாண்டியாவும் 4 பவுண்டரியுடன் 29 (27) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அபார கேட்ச்:
அதனால் 94/5 என திண்டாடிய இந்தியா 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட போது கடைசி நேரத்தில் டெத் ஓவர்களில் இலங்கையை வெளுத்து வாங்கிய தீபக் ஹூடா 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 41* (23) ரன்களும் அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31* (20) ரன்களும் குவித்து காப்பாற்றினர். அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கைக்கு நிசாங்கா 1, டீ சில்வா 8, அஸலங்கா 12, குசால் மெண்டிஸ் 28, ராஜாபக்சா 10 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.

அதனால் 68/5 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஓவரில் வணிந்து ஹஸரங்கா அதிரடியாக 21 (10) ரன்களும் கேப்டன் சனாக்கா 45 (27) ரன்களும் குவித்து போராடி அவுட்டானார்கள். அதனால் கதை முடிந்ததாக கருதப்பட்டாலும் கடைசி நேரத்தில் கருணரத்னே 2 சிக்ஸருடன் 23* (16) ரன்கள் குவித்து போராடினார். இறுதியில் கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது 10 ரன்கள் மட்டுமே எடுத்த இலங்கை 20 ஓவரில் 160 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

அதனால் வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற இந்தியாவுக்கு அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய சிவம் மாவி 4 விக்கெட்கள் எடுத்தார். அந்த வகையில் புத்தாண்டின் முதல் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக இப்போட்டியில் 24/2 என்ற நிலைமையில் களமிறங்கிய இலங்கை வீரர் சரித் அஸலங்கா 12 ரன்களுடன் போராடிய போது உம்ரான் மாலிக் வீசிய 8வது ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்தார்.

ஆனால் உம்ரான் மாலிக் வீசிய அதிவேகத்துக்கு கட்டுக்கடங்காத அந்த பந்து நேராக மேலே சென்று கேட்ச்சாக மாறியது. அப்போது தேர்ட் மேன் பகுதியில் நின்று கொண்டிருந்த ஹர்ஷல் படேல் நோக்கி பந்து சென்றாலும் விக்கெட் கீப்பர் இசான் கிசான் ஆரம்பத்திலேயே பந்தில் கண்ணை வைத்து அதை துரத்திக் கொண்டு ஓடினார். குறிப்பாக நான் பிடித்துக் கொள்கிறேன் என்று கையால் சைகை செய்து கொண்டே ஹர்ஷல் படேலை ஒதுக்கிய அவர் பந்தை பார்த்துக் கொண்டே வெகு தூரம் ஓடிச் சென்று பைன் லெக் பவுண்டரியின் அருகில் பந்து கீழே வரும் போது கச்சிதமாக தாவி பிடித்தார்.

இதையும் படிங்கIND vs SL : ஈஸியா ஜெயிச்சிடலாம்னு பாத்தீங்களா? இறுதிப்பந்து வரை பயத்தை காட்டி மிரட்டிய இலங்கை – இந்தியா த்ரில் வெற்றி

அதை ஹர்திக் பாண்டியா உட்பட அனைத்து அணியினரும் மனதார பாராட்டியதை போலவே ரசிகர்களும் அவரது அற்புதமான அர்ப்பணிப்பு மிகுந்த கேட்ச்சை பார்த்து வியந்து பாராட்டினார்கள். அத்துடன் கடந்த 2018ஆம் ஆண்டு புனேவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு போட்டியில் முன்னாள் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் தோனி இதே போல் நீண்ட தூரம் ஓடிச் சென்று கேட்ச் பிடித்தது போலவே அவரது மாநிலத்தைச் சேர்ந்த இசான் கிசானும் செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

Advertisement