IND vs SL : ஈஸியா ஜெயிச்சிடலாம்னு பாத்தீங்களா? இறுதிப்பந்து வரை பயத்தை காட்டி மிரட்டிய இலங்கை – இந்தியா த்ரில் வெற்றி

IND vs SL Surya
- Advertisement -

2023 புத்தாண்டில் இந்திய கிரிக்கெட் அணி முதலாவதாக இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. குறிப்பாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் அணி விளையாடுகிறது. அந்த நிலையில் டிசம்பர் 3ஆம் தேதியன்று மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு முதல் ஓவரிலேயே 17 ரன்களை தெறிக்க விட்ட இசான் கிசான் அதிரடி தொடக்கம் கொடுத்தார்.

ஆனால் அறிமுகமாக விளையாடிய மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 7 (5) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்த வந்த சூரியகுமார் யாதவும் 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். போதாக்குறைக்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் பொறுப்பின்றி 5 (6) ரன்னில் அவுட்டானதால் 46/3 என தடுமாறிய இந்தியாவை மீட்டெடுப்பதற்காக அதிரடியை குறைத்த இஷான் கிசான் கேப்டன் பாண்டியாவுடன் நிதானத்தை வெளிப்படுத்த முயற்சித்து 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 37 (29) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களில் கேப்டன் பாண்டியாவும் 4 பவுண்டரியுடன் 29 (27) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

- Advertisement -

போராட்ட வெற்றி:
அதனால் 94/5 என திண்டாடிய இந்தியா 150 ரன்கள் தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது ஜோடி சேர்ந்த தீபக் ஹூடா – அக்சர் பட்டேல் ஆகியோர் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்களை சேர்த்தனர். குறிப்பாக இலங்கையின் டெத் பவுலிங் சுமாராக இருந்ததை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய அந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றியதால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 162/ ரன்கள் சேர்த்தது. அதில் தீபக் ஹூடா 1 பவுண்டரி 4 சிக்ஸருடன் 41* (23) ரன்களும் அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 31* (20) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 163 ரன்களை துரத்திய இலங்கைக்கு அறிமுகப் போட்டியில் விளையாடிய இந்திய வீரர் சிவம் மாவி தொடக்க வீரர் பதும் நிசாங்காவை 1 (3) ரன்னில் காலி செய்து அடுத்து வந்த டீ சில்வாவையும் 8 (6) ரன்களில் அவுட்டாக்கினார். அதனால் 24/2 என சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணியை மீட்டெடுக்க முயன்ற மற்றொரு தொடக்க வீரர் குசால் மெண்டிஸ் 5 பவுண்டரியுடன் 28 (25) ரன்களிலும் சரித் அஸலாங்கா 12 (15) ரன்களிலும் அடுத்தடுத்த ஓவரில் அவுட்டானார்கள். போதாகுறைக்கு அதிரடி வீரர் ராஜபக்சாவும் 10 (11) ரன்னில் அவுட்டானதால் 68/5 என தடுமாறிய இலங்கை மிடில் ஓவர்களில் திண்டாடியது.

- Advertisement -

இருப்பினும் அந்த சமயத்தில் கேப்டன் சனாக்காவுடன் ஜோடி சேர்ந்த வணிந்து ஹசரங்கா ஆனது ஆகட்டும் என்ற வகையில் 1 பவுண்டர் 2 சிக்ஸருடன் 21 (10) ரன்களை தெறிக்க விட்டு இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்த போது மீண்டும் சிவம் மாவி அவரை அவுட்டாக்கினார். அப்போது மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட கேப்டன் சனாக்கா 3 பவுண்டரி 3 சிக்ஸருடன் 45 (17) ரன்கள் குவித்து வெற்றி பாதைக்கு அழைத்து வந்த போதிலும் பினிஷிங் செய்யாமல் உம்ரான் மாலிக் வேகத்தில் அவுட்டானார்.

அடுத்து வந்த மஹீஸ் தீக்சனா 1 ரன்னில் அவுட்டானதால் கதை முடிந்ததாக கருதப்பட்ட இலங்கைக்கு கடைசி நேரத்தில் சமிக்கா கருணரத்னே வெற்றிக்கு போராடியதால் மீண்டும் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது ஏற்கனவே 2 ஓவரில் 21 ரன்கள் கொடுத்த அக்ஸர் படேலை பாண்டியா அழைத்தது ஆச்சரியமாக இருந்தது. அதில் முதலிரண்டு பந்தில் ஒய்ட் உட்பட 2 ரன்களை கொடுத்த அவருடைய 3வது பந்தில் கருணரத்னே சிக்ஸர் பறக்க விட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்த பந்தில் ரன் எடுக்க முடியாத அவர் 5வது பந்தில் 2 ரன் எடுக்க முயற்சித்த போது எதிர்ப்புறமிருந்த ரஜிதா 5 (4) ரன்னில் ரன் அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் 4 ரன்கள் தேவைப்பட்ட போது மீண்டும் 2 ரன்களை எடுக்க முயற்சித்த போது மதுசங்கா ரன் அவுட்டானதால் கருணரத்னேவின் 21* (10) ரன்கள் போராட்டம் வீணானது.

இதையும் படிங்க10வது டெயில் எண்டர் சாதனை ஜோடியிடம் அவமான அடி வாங்கிய பாகிஸ்தான் – புத்தாண்டிலும் தள்ளாடும் பரிதாப நிலை

அதனால் 20 ஓவர்களில் இலங்கையை 160 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா வெறும் 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்று புத்தாண்டை வெற்றியுடன் துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் அதிகபட்சமாக சிவம் மாவி 4 விக்கெட்கள் எடுத்து முக்கிய பங்காற்றினர்.

Advertisement