10வது டெயில் எண்டர் சாதனை ஜோடியிடம் அவமான அடி வாங்கிய பாகிஸ்தான் – புத்தாண்டிலும் தள்ளாடும் பரிதாப நிலை

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் சமீபத்தில் இங்கிலாந்திடம் சொந்த மண்ணில் சந்தித்த ஒயிட்வாஷ் தோல்விக்கும் 2022இல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் சந்தித்த தொடர் தோல்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த நிலைமையில் இத்தொடரின் முதல் போட்டியில் சுமாராகவே செயல்பட்ட அந்த அணி கடைசி நாளில் போதிய வெளிச்சமின்மையால் தோல்வியிலிருந்து தப்பி டிரா செய்தது. அதைத்தொடர்ந்து டிசம்பர் 2ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 134 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த டாம் லாதம் 71 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் அட்டகாசமாக பேட்டிங் செய்த மற்றொரு தொடக்க வீரர் டேவோன் கான்வே அடுத்து வந்த கேன் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை மேலும் வலுப்படுத்தி 16 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்து 122 ரன்கள் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

அவமான அடி:
அதை பயன்படுத்திய பாகிஸ்தான் கேன் வில்லியம்சன் 36, ஹென்றி நிக்கோலஸ் 26, டார்ல் மிட்சேல் 3, மைக்கேல் ப்ரெஸ்வெல் 0 என முக்கிய வீரர்களை பெரிய ரன்கள் எடுக்க விடாமல் அவுட்டாக்கி அசத்தியது. இருப்பினும் 51 ரன்கள் குவித்து போராடிய விக்கெட் கீப்பர் டாம் ப்ளண்டல் அவுட்டானதும் பேட்ஸ்மேன்கள் முடிந்து போனதால் நியூசிலாந்து விரைவில் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 345/9 என்ற நிலைமையில் 10வது விக்கெட்டுக்கு கடைசி 2 வீரர்களான மார்ட் ஹென்றி – அஜஸ் படேல் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரத்தை போட்டு பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்த ரன்களை சேர்த்தனர்.

போதாக்குறைக்கு பாகிஸ்தான் பவுலிங் சுமாராக இருந்ததையும் தார் ரோட் போல பிட்ச் இருந்ததையும் பயன்படுத்திய அந்த ஜோடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய தொல்லையாக மாறியது. அதை உடைப்பதற்கு பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்திய கேப்டன் பாபர் அசாமும் பாகிஸ்தான் ரசிகர்களும் கடுப்பாகும் அளவுக்கு தொடர்ந்து சிறப்பாக பேட்டிங் செய்த அந்த ஜோடியில் அரை சதம் கடந்த ஹென்றி 68* ரன்கள் குவித்து சதத்தை நோக்கி விளையாடினார். இருப்பினும் ஒரு வழியாக 10வது விக்கெட்டுக்கு 104 பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் அஜஸ் படேல் 35 ரன்களில் அவுட்டானதால் நியூசிலாந்து 449 ரன்கள் குவித்து அசத்தியது.

- Advertisement -

பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகள் எடுத்தாலும் சொந்த மண்ணில் பேட்டிங் பற்றி பெரிய அளவில் தெரியாத 10வது டெயில் எண்டர்கள் ஜோடி 104 ரன்கள் பார்ட்னர்சிப் அமைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்டது ரசிகர்களை கிண்டலடிக்க வைத்தது. மேலும் 104 ரன்கள் குவித்த அந்த ஜோடி டெஸ்ட் கிரிக்கெட்டில் 21ஆம் நூற்றாண்டில் 10வது விக்கெட்டுக்கு அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற வரலாற்றை படைத்தது.

அந்த பட்டியல்:
1. கென் ஹிங்ஸ் (இங்கிலாந்து) : 128, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 1966
2. ஜான் ப்ரெஸ்வெல் – ஸ்டீபன் பூக் : 124, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 1985
3. ரெஹி டுப் – வேர்விக் ஆம்ஸ்ட்ராங் : 120, இங்கிலாந்துக்கு எதிராக, 1902
4. மாட் ஹென்றி – அஜஸ் படேல் : 104, பாகிஸ்தானுக்கு எதிராக, 2023*

- Advertisement -

அத்துடன் கராச்சி மைதானத்தில் 10வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த முதல் ஜோடி என்ற வரலாற்றையும் அவர்கள் படைத்தனர். அப்படி டெயில் எண்டர் ஜோடியிடம் அவமான அடி வாங்கிய பாகிஸ்தான் அடுத்ததாக பேட்டிங்கிலும் 2வது நாள் முடிவில் 154/3 ரன்களுடன் தள்ளாடி வருகிறது. அந்த அணிக்கு அப்துல்லா சபிக் 19, சான் மசூட் 20, கேப்டன் பாபர் அசாம் 24 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் இமாம்-உல்-ஹக் 74*, ஷாகீல் 13* ரன்களுடன் போராடி வருகிறார்கள்.

இதையும் படிங்கIND vs SL : கடைசி 5 ஓவர்ல மட்டும் அடிக்கலனா மானம் போயிருக்கும். இந்திய அணியின் சொதப்பல் – என்ன நடந்தது?

முன்னதாக 2022இல் அனைத்து ஏரியாவிலும் அடி வாங்கி மெகா வீழ்ச்சியை சந்தித்த பாகிஸ்தான் 2023 புத்தாண்டில் நல்ல முன்னேற்றத்தை காண்பதற்கு போராடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த மாற்றத்தையும் காணாத அந்த அணி புத்தாண்டிலும் தள்ளாடுவது நிறைய ரசிகர்களை கிண்டலடிக்க வைத்துள்ளது

Advertisement