IND vs SL : கடைசி 5 ஓவர்ல மட்டும் அடிக்கலனா மானம் போயிருக்கும். இந்திய அணியின் சொதப்பல் – என்ன நடந்தது?

IND vs SL
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய கிரிக்கெட் அணி களமிறங்கியுள்ளது. அதில் முதலாவதாக 2024 டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வகையில் நடைபெறும் டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர் வீரர்களுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அந்த நிலையில் ஜனவரி 3ஆம் தேதியன்று மும்பையில் இருக்கும் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு துவங்கிய டி20 தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய சுப்மன் கில் – இஷான் கிசான் ஆகியோர் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். அதில் வங்கதேசத்திற்கு எதிராக இரட்டை சதமடித்து சூப்பரான ஃபார்மில் இருக்கும் இஷான் கிசான் முதல் ஓவரிலேயே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டு 17 ரன்கள் குவித்து நல்ல தொடக்கம் கொடுத்தார். ஆனால் மறுபுறம் தடுமாறிய சுப்மன் கில் 7 (5) ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக தடுமாறி 10 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 7 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

- Advertisement -

பொதுவாகவே சிக்ஸர் அடிக்கும் வகையில் வித்தியாசமான ஷாட்டை அடித்த அவர் இன்று துரதிஷ்டவசமாக அவுட்டானார். அதை விட அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் அதிரடியை துவக்குவதற்கு முன்பாகவே 5 (6) ரன்னில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தார். அதனால் 46/3 என தடுமாறிய இந்தியாவுக்கு மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட இசான் கிசான் சற்று பொறுமையை குறைத்து கேப்டன் பாண்டியாவுடன் சேர்ந்து நிதானத்தை வெளிப்படுத்தினாலும் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 37 (28) ரன்களில் ஆட்டமிழந்து சென்றார்.

அதனால் மேலும் தடுமாறிய இந்தியாவை பொறுப்புடன் விளையாடி காப்பாற்ற முயன்ற கேப்டன் பாண்டியாவும் அடுத்த சில ஓவர்களில் 4 பவுண்டரியுடன் 29 (27) ரன்களில் அவுட்டானார். அதன் காரணாமக 14.1 ஓவரில் 94/1 என தடுமாறிய இந்தியா 150 ரன்களை தாண்டுமா என்று ரசிகர்கள் கவலையடைந்த போது நாங்கள் இருக்கிறோம் என்ற வகையில் கடைசி நேரத்தில் தீபக் ஹூடா – அக்சர் பட்டேல் ஆகியோர் அதிரடியாக ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

குறிப்பாக டெத் ஓவர்களில் வெளுத்து வாங்கிய இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து காப்பாற்றியதால் தப்பிய இந்தியா 20 ஓவர்களில் 162/5 ரன்கள் எடுத்தது. அதில் தீபக் ஹூடா அதிரடியாக 1 பவுண்டரி 4 சிக்சருடன் 41* (23) ரன்களும் அக்சர் பட்டேல் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 31* (20) ரன்களும் எடுத்து காப்பாற்றினர்.

முன்னதாக இப்போட்டி நடைபெறும் வான்கடே மைதானம் பேட்டிங்க்கு சாதகமானது என்பதுடன் இரவு நேரத்தில் பனியின் தாக்கத்தில் சேசிங் செய்வது எளிதானது என்பதை கருதி டாஸ் வென்ற இலங்கை முதலில் பந்து வீசியது. அதில் ஆரம்ப முதலே இந்திய பேட்ஸ்மேன்களை அதிரடியாக விளையாட விடாமல் விக்கெட்டுகளை எடுத்து பெரிய ரன்களை எடுக்க விடாமல் கட்டுப்படுத்தியது. அதனால் 180 ரன்களை எடுக்க வேண்டிய இந்தியா 162 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்கவீடியோ : மன்கட் ரன் அவுட் செய்த ஆடம் ஜாம்பா, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தது ஏன்? பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சர்ச்சை

ஆனால் 180 – 200 ரன்களை கூட எளிதாக சேசிங் செய்து விடக்கூடிய வான்கடே மைதானத்தில் இந்தியா நிர்ணயித்துள்ள இந்த இலக்கு குறைவாகவே பார்க்கப்படுகிறது. அதனால் பந்து வீச்சில் கட்டுக்கோப்பாகவும் விக்கெட்டுகளை எடுத்து அசத்தலாக செயல்பட்டால் மட்டுமே இப்போட்டியில் இந்தியா வெல்ல முடியும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Advertisement