வீடியோ : மன்கட் ரன் அவுட் செய்த ஆடம் ஜாம்பா, அம்பயர் அவுட் கொடுக்க மறுத்தது ஏன்? பிக்பேஷ் தொடரில் மற்றுமொரு சர்ச்சை

Adam Zamba Mankad
- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பிரபல பிக்பேஷ் லீக் தொடரின் 2022 – 23 சீசன் விறுவிறுப்பாக பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. அதில் ஜனவரி 3ஆம் தேதியன்று நடைபெற்ற 27வது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனீகேட்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் ஆகிய அணிகள் மோதின. உலகப் புகழ் பெற்ற மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற ஸ்டார்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய ரெனீகேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 141/7 ரன்கள் சேர்த்தது. ஆரம்பம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த அந்த அணிக்கு அதிகபட்சமாக மார்ட்டின் கப்டில் 32, ஷான் மார்ஷ் 32, மெக்கன்சி ஹார்வி 32* என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை எடுத்தனர்.

Bbl

- Advertisement -

அதை தொடர்ந்து களமிறங்கிய ஸ்டார்ஸ் அணி அதை விட சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி 20 ஓவர்களில் 108/9 ரன்கள் மட்டுமே எடுத்து 33 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக லார்கின் 48* ரன்கள் எடுத்த நிலையில் ரெனீகேட்ஸ் சார்பில் அதிகபட்சமாக டாம் ரோஜர்ஸ் 5 விக்கெட்டுகளை சாய்த்து வெற்றியின் நாயகனாக செயல்பட்டார். முன்னதாக அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ரெனீகேட்ஸ் அணிக்காக கடைசி நேரத்தில் அதிரடி காட்டிய மெக்கன்சி ஹார்வி 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 32* (23) ரன்கள் எடுத்தார்.

மறுத்த நடுவர்:
குறிப்பாக கடைசி ஓவரில் எதிர்ப்புறமிருந்த அவர் 5வது பந்தில் பந்து வீசுவதற்கு முன்பாகவே வெள்ளை கோட்டை விட்டு வெளியேறியதால் அந்த ஓவரை வீசிய நட்சத்திர ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா ரன் அவுட் அதாவது மன்கட் முறையில் அவுட்டாக்கினார். அதைப் பார்த்து வர்ணையாளர்களும் ரசிகர்களும் அதிர்ந்த நிலையில் தனது தவறை உணர்ந்த பேட்ஸ்மேன் ஹார்வி ஒரு சில நொடிகள் யோசித்தாலும் பின்னர் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார். ஆனால் அதில் சந்தேகத்தை உணர்ந்த களத்தில் இருந்த நடுவர் நேரடியாக 3வது நடுவரின் உதவியை நாடினார்.

அதை சோதித்த 3வது நடுவர் பவுலர் பந்தை கையிலிருந்து ரிலீஸ் செய்வதற்கு முன்பாக பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறியதை பார்த்தார். இருப்பினும் பந்து வீச வந்த பவுலர் பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை விட்டு வெளியே சென்று விட்டார் என்று தெரிந்த பின்பு வேண்டுமென்றே பந்து வீசாமல் ஸ்டம்பில் அடித்து ரன் அவுட் செய்ததும் தெரிய வந்தது. அதற்கு சாட்சியாக பந்தை ரிலீஸ் செய்வதற்காக அவரது கை கற்பனை 90 டிகிரி செங்குத்து கோட்டை கடந்து சென்று விட்டது. அதையே கூறிய 3வது நடுவர் களத்திலிருந்த நடுவர் கொடுத்த அவுட்டை மாற்றி நாட் அவுட் கொடுத்தார்.

- Advertisement -

அதனால் மன்கட் அவுட்டை கூட ஒழுங்காக செய்ய தெரியாமல் ஆடம் ஜாம்பா ஏமாற்றத்துடன் கடைசி பந்தை வீசிய நிலையில் அவருடைய தவறான டைமிங் காரணமாக பேட்ஸ்மேன் மெக்கன்சி ஹார்வி தொடர்ந்து பேட்டிங் செய்தார். இருப்பினும் இந்த இடத்தில் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கிறார்கள். ஏனெனில் எப்படியாக இருந்தாலும் பந்து வீசுவதற்கு முன்பாகவே பேட்ஸ்மேன் வெள்ளைக்கோட்டை கடந்து விட்டாரே? பின்னர் ஏன் அவுட் கொடுக்கவில்லை என்று ரசிகர்கள் வினவுகிறார்கள்.

இருப்பினும் பந்தை ரிலீஸ் செய்யும் போது பவுலர் சற்று தாமதமாக கற்பனை செங்குத்து கோட்டை கடந்து விட்டார். அது பந்து வீசாமல் வேண்டுமென்று அவுட் செய்வதற்கு சமமாகும். இதுவே 2019 ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லர் கிரீஸ் விட்டு வெளியேறிய போது அஷ்வின் தனது கையை பந்து வீசுவதற்கு மேலே கொண்டு பந்து வீசுவதற்கு முன்பாகவே செங்குத்து கோட்டை கடக்காமல் அவுட் செய்தார்.

இதையும் படிங்கIND vs SL : இந்திய அணி முதலில் பேட்டிங். 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

அந்த வகையில் மற்றுமொரு புதைந்து கிடந்த விதிமுறை இந்த தருணத்தால் நிறைய ரசிகர்கள் அறியும் வகையில் வெளியாகியுள்ளது. இருப்பினும் இதே தொடரில் பண்டரிக்குள் கேட்ச் பிடித்தது அவுட் கொடுக்கப்பட்டது ரசிகர்களிடம் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில் இதுவும் தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

Advertisement