IND vs SL : இந்திய அணி முதலில் பேட்டிங். 2 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு – பிளேயிங் லெவன் லிஸ்ட் இதோ

Hardik-Pandya-1
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் டி20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது இன்று ஜனவரி 3-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் துவங்கியது. ஹார்டிக் பாண்டியாவில் தலைமையிலான இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த தொடர் முழுவதும் பங்கேற்று விளையாட இருப்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. அதேபோன்று இந்திய அணிக்கு 2023-ஆம் ஆண்டின் முதல் போட்டியகவும் இந்த போட்டி அமைந்துள்ளது.

IND vs SL

- Advertisement -

இந்நிலையில் இந்த டி20 தொடரின் முதல் போட்டிக்கான டாஸ் சற்று முன்னர் போடப்பட்டது. அந்த டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷானகா முதலில் பந்துவீசுவதாக தேர்வு செய்தார். அதன்காரணமாக தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.

இந்த டாஸிற்கு பிறகு இந்திய அணியில் ஏதாவது வீரருக்கு அறிமுக வாய்ப்பு கிடைக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் இன்றைய போட்டியில் 2 இளம் வீரர்களுக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி ஒரு தேர்வு நாம் அனைவரும் எதிர்பார்த்தது போலவே சுப்மன் கில் துவக்க வீரராக அறிமுக வாய்ப்பினை பெற்றுள்ளார்.

Shubman Gill

மற்றொரு வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளரான சிவம் மாவியும் தனது அறிமுக வாய்ப்பினை பெற்றுள்ளார். அவர்களை தவிர்த்து பெரிய மாற்றங்கள் ஏதுமில்லை. அதேபோன்று இந்த போட்டியில் தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

- Advertisement -

முற்றிலும் இளம்வீரர்களை கொண்ட இந்திய அணியின் செயல்பாடுகளை காண அனைவரும் காத்திருக்கின்றனர். இன்னும் சிறிது நேரத்தில் துவங்கவுள்ள இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : பாண்டியாவால ரொம்ப நாள் கேப்டனா இருக்க முடியாது. ஏன் தெரியுமா? – இர்பான் பதான் ஓபன்டாக்

1) இஷான் கிஷன், 2) சுப்மன் கில்(அறிமுகம்), 3) சூரியகுமார் யாதவ், 4) சஞ்சு சாம்சன், 5) ஹார்டிக் பாண்டியா (கேப்டன்), 6) தீபக் ஹூடா, 7) அக்சர் படேல், 8) ஹர்ஷல் படேல், 9) சிவம் மாவி(அறிமுகம்), 10 ) உம்ரான் மாலிக், 11) யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement