வீடியோ : 115 மீட்டர் மெகா சிக்ஸரை மைதானத்துக்கு வெளியே பறக்க விட்ட டு பிளேஸிஸ், விராட் – மேக்ஸ்வெல் அதிரடி, ஆர்சிபி ஸ்கோர் இதோ

- Advertisement -

இந்திய ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 10ஆம் தேதியன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணிகள் மோதின. அதில் தன்னுடைய கடைசி போட்டியில் கொல்கத்தாவிடம் மோசமாக தோற்ற பெங்களூரு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய நிலையில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆரம்பத்திலேயே கிளாஸ் நிறைந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி விரைவாக ரன்களை குவித்தார்.

தற்போது நல்ல பார்மில் இருக்கும் அவர் கேப்டன் டு பிளேஸிஸ் உடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு அரை சதமடித்தார். அதே வேகத்தில் 11.3 ஓவர்கள் வரை லக்னோ பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 96 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவுக்கு மிகச் சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் விராட் கோலி 4 பவுண்டரி 4 சிக்சருடன் விராட் அமித் மிஸ்ராவிடம் 61 (4) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் உடன் கைகோர்த்த டு பிளேஸிஸ் விராட் கோலி அவுட்டானதும் சற்று அதிரடியான வேகத்தில் ரன்களை குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

- Advertisement -

மெகா சிக்சர்:
குறிப்பாக லக்னோவின் இளம் சுழல் பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் வீசிய 15வது ஓவரின் 2வது பந்தில் கவர்ஸ் திசையில் ஃபிளாட்டான சிக்சரை பறக்க விட்ட அவர் அதே ஓவரின் 4வது பந்தில் மிட் விக்கெட் திசைக்கு மேல் மெகா சிக்சரை பறக்க விட்டார். அற்புதமான டைமிங் மற்றும் அதிரடியான பவர் கொண்டு அடிக்கப்பட்டதால் அதிரடியான வேகத்தில் பறந்த அந்த பந்து 115 மீட்டர்கள் கடந்து சின்னசாமி மைதானத்தை தாண்டி வெளியே விழுந்தது. அதன் வாயிலாக இந்த ஐபிஎல் தொடரில் பெரிய சிக்சரை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்த டு பிளேஸிஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி அரை சதமடித்தார்.

அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல் இந்த சீசனில் முதல் முறையாக அரை சதமடித்து பெங்களூரு 200 ரன்கள் கடக்க உதவினார். அந்த வகையில் ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல் அடித்து வெளுத்து வாங்கிய இந்த ஜோடியை பிரிக்க லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் போட்ட அத்தனை திட்டங்களையும் உடைத்த இந்த ஜோடி கடைசி ஓவரில் தான் பிரிந்தது. குறிப்பாக 3 பவுண்டரி 6 சிக்சரை விளாசிய கிளன் மேக்ஸ்வெல் 59 (29) ரன்கள் குவித்து மார்க் வுட் வேகத்தில் அவுட்டானார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய டு பிளேஸிஸ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 79* (46) ரன்கள் குவித்ததால் 20 ஓவர்களில் பெங்களூரு 212/2 ரன்கள் விளாசியது. சுமாராக செயல்பட்ட லக்னோ சார்பில் அதிகபட்சமாக மார்க் வுட் மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆனாலும் அளவில் சிறிய சின்னசாமி மைதானத்தில் வரலாற்றில் பலமுறை அசால்டாக 250 ரன்கள் சேசிங் செய்யப்பட்டுள்ள நிலையில் இன்றைய பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதால் பேட்டிங் போலவே பவுலிங் துறையிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே பெங்களூரு வெற்றி பெற முடியும் என்று சொல்லலாம்.

இதையும் படிங்க:IPL 2023 : இன்றைய இந்த நாளை உங்க வாழ்க்கையில மறந்துடுங்க. அதுதான் நல்லது – இளம்வீரருக்கு இர்பான் பதான் அட்வைஸ்

குறிப்பாக கெய்ல் மேயர்ஸ் அதிரடியான பார்மில் இருக்கும் நிலையில் குவிண்டன் டீ காக் திரும்பியுள்ளது லக்னோ அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. எனவே இந்த இலக்கை சிறப்பாக பந்து வீச்சினால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும் என்று ஜாம்பவான் சச்சினும் பெங்களூருவை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement