ஈ சாலா கப் நம்தே சொல்வதில் உண்மையை உளறிய டு பிளேஸிஸ், விழுந்து சிரித்த விராட் கோலி – கலாய்க்கும் ரசிகர்கள்

Faf Du Plessis
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் அகமதாபாத் நகரில் மார்ச் 31ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கியுள்ள 10 அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வென்று நீண்ட நாள் கனவை நிஜமாக்கும் முனைப்புடன் விளையாடுகிறது. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008 முதல் கடந்த 15 வருடங்களில் லீக் சுற்றில் அபாரமாக செயல்படும் அந்த அணி நாக் அவுட் சுற்றில் ஏதோ ஒரு முக்கிய தருணத்தில் சொதப்பி வெற்றியையும் கோப்பையையும் எதிரணிக்கு தாரை வார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

குறிப்பாக அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி ஆகியோரது தலைமையில் 2009, 2011 ஆகிய சீசன்களில் ஃபைனல் வரை சென்று தோல்வியை சந்தித்த பெங்களூருவுக்கு 2013இல் விராட் கோலி புதிய கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற நிறைய மகத்தான வீரர்கள் விளையாடியும் நாக் அவுட் சுற்றில் சொதப்புவதில் கொஞ்சம் கூட மாறாத பெங்களூரு 2016 சீசனில் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் ஃபைனலில் கடைசி நேரத்தில் மோசமாக செயல்பட்டு கைக்கு கிடைத்த சாம்பியன் பட்டத்தை நழுவ விட்டது. அதனால் விராட் கோலி இருக்கும் வரை கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் கடந்த வருடம் பதவி விலகிய அவருக்கு பதிலாக டு பிளேஸிஸ் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

உளறிய டு பிளேஸிஸ்:
அவரது தலைமையில் லீக் சுற்றில் அசத்திய பெங்களூரு மீண்டும் பிளே ஆஃப் சுற்றில் சுமாராக செயல்பட்டு ராஜஸ்தானிடம் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதே போல் சமீபத்தில் நடைபெற்ற மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் ஸ்மிருத்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு படுமோசமாக செயல்பட்டு புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது. அதனால் சூரியன் மேற்கே உதித்தாலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு கோப்பையை வெல்வது எப்போதும் நடக்காது என்று வெளிப்படையாகவே எதிரணி ரசிகர்கள் கலாய்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மொத்தத்தில் தரமான வீரர்கள், வித்யாமான கேப்டன்கள், புதிய ஜெர்ஸி என எதை மாற்றியும் கோப்பை வெல்ல முடியாமல் திணறும் பெங்களூரு இந்த வருடம் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பிய புத்துணர்ச்சியுடன் கோபையை முத்தமிட மீண்டும் போராட உள்ளது. இந்நிலையில் இந்த சீசன் துவங்குவதற்கு முன்பாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் டு பிளேஸிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது இந்த வருடம் பெங்களூருவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை கேப்டன் டு பிளேஸிஸ் சொல்வார் என்று தொகுப்பாளர் கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அந்த சமயத்தில் அருகில் அமர்ந்திருந்த விராட் கோலி அவருடைய காதுக்கு அருகே சென்று பெங்களூருவின் தாரக மந்திரமான “ஈ சாலா கப் நம்தே” என்பதை சொல்லுமாறு சொன்னதாக தெரிகிறது. ஆனால் அந்த சமயத்தில் ஒலிபெருக்கிகள் சத்தம் அதிகமாக இருந்ததால் அதை சரியாக காதில் வாங்காத டு பிளேஸிஸ் வேகமாக மைக்கை வாங்கி “ஈ சாலா கப் நஹி அதாவது ஈ சாலா கப் நமதில்லை” என்று தெரியாதத் தனமாக சொன்னது அருகில் இருந்த விராட் கோலியை அவர் மீது விழுந்து சிரிக்க வைத்தது போல அரங்கில் இருந்த அனைவரையும் சிரிப்பலையில் ஆழத்தியது.

அதைத் தொடர்ந்து விராட் கோலியும் தொகுப்பாளரும் சரியாக சொன்னதை கேட்டு மீண்டும் “ஈ சாலா கப் நம்தே” என்று டு பிளேஸிஸ் சிரித்த முகத்துடன் சொன்ன அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெயரிலாகிறது. அதை பார்க்கும் ரசிகர்கள் உளறலாக இருந்தாலும் பெங்களூரு எப்போதும் கோப்பையை வெல்லப் போவதில்லை என்ற உண்மையை தான் டு பிளேஸிஸ் சொன்னதாக கலாய்க்கிறார்கள்.

இதையும் படிங்க:IPL 2023 : இதுல கூடவா ஷாஹீன் அப்ரிடியை காப்பி அடிப்பீங்க, அர்ஷிதீப்பை கலாய்த்த பாக் ரசிகர்கள் – இந்திய ரசிகர்கள் மாஸ் பதிலடி

மேலும் சென்னை அணியிலிருந்து சென்று பெங்களூரு அணிக்காக விளையாடி ஒரு வருடமாகியும் தாரக மந்திரம் தெரியாத அளவுக்கு டு பிளேஸிஸ் அந்த அணியுடன் இன்னும் செட்டாகவில்லை என்பது இதிலிருந்து தெரிவதாக ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். இதைத்தொடர்ந்து இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தன்னுடைய முதல் போட்டியில் மும்பையை பெங்களூரு எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement