அப்றம் நண்பா எப்டி இருக்க? பல வருடங்களாக கலாய்த்த பொல்லார்ட்டை – வம்படியாக கலாய்த்த ப்ராவோ

Bravo Pollard
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை பரபரப்பான போட்டிகளுடன் மகிழ்வித்து நிறைவு பெற்றுள்ள ஐபிஎல் 2023 டி20 தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியன் குஜராத்தை அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் தோற்கடித்து கோப்பையை வென்றது. அந்த வகையில் 2010, 2011, 2018, 2021 ஆகிய வருடங்களில் கோப்பையை வென்ற சென்னை இந்த வெற்றியையும் சேர்த்து 5 சாம்பியன் பட்டங்களை வென்று வெற்றிகரமான அணி என்ற தன்னுடைய பரம எதிரி மும்பையின் ஆல் டைம் சாதனையை சமன் செய்துள்ளது.

2010, 2011 ஆகிய காலகட்டங்களில் அடுத்தடுத்த கோப்பைகளை வென்று முன்னிலையில் இருந்த சென்னையை ரோகித் சர்மா பொறுப்பேற்றதும் 2019 வரையிலான காலகட்டத்தில் 3 ஃபைனல்களில் தோற்கடித்த மும்பை மொத்தமாக 5 கோப்பைகளை வென்று அசைக்க முடியாத வெற்றிகரமான அணியாக விஸ்வரூபம் எடுத்தது. அதனால் 2020 முதலே எங்களை மிஞ்சுவதற்கு யாருமில்லை என்பது போல் மும்பை ரசிகர்கள் சென்னை ரசிகர்களுடன் சமூக வலைதளங்களிலும் சரி உண்மையான வாழ்வில் நண்பர்களாகவும் சரி கலாய்த்து வந்தனர்.

- Advertisement -

என்ன பங்காளி எப்டி இருக்க:
அப்போதெல்லாம் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டிய நிலைமையை சந்தித்த சென்னை ரசிகர்கள் தற்போது 5வது கோப்பையை வென்றுள்ளதால் கடந்த காலங்களில் கலாய்த்த மும்பை ரசிகர்களை தற்போது தேடி சென்று பதிலடி கொடுத்த வருகின்றனர். அந்த வகையில் 5 கோப்பையை வென்றதால் மும்பை அணிக்காக விளையாடி இப்போதும் பயிற்சியாளராக இருக்கும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த கைரன் பொல்லார்ட் கடந்த காலங்களில் சென்னைக்காக விளையாடி தற்போது பயிற்சியாளராக இருக்கும் பிராபோவை கலாய்த்தாக தெரிகிறது.

ஆனால் தற்போது மும்பைக்கு நிகராக சென்னை சார்பாக கோப்பையை வென்றுள்ள ப்ராவோ ஏற்கனவே சிபிஎல், பிக்பேஷ் போன்ற வெளிநாட்டு தொடர்களையும் சேர்த்து தங்களுடைய டி20 கேரியரில் இதுவரை மொத்தமாக 17 கோப்பைகளை வென்றுள்ளார். அதே போல மும்பைக்காக மட்டுமல்லாமல் சிபிஎல் போன்ற தொடர்களை சேர்த்து பொல்லார்ட் தமது கேரியரில் மொத்தமாக 15 கோப்பைகளை மட்டுமே வென்றார். அப்படிப்பட்ட நிலையில் நாடு திரும்பியுள்ள ப்ராவோ தம்முடைய நண்பரான பொல்லார்ட்டை நேரடியாக சந்தித்து காரில் தனது அருகில் வைத்துக் கொண்டே இது பற்றி நேரடியாக கலாய்த்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவேற்றியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு. “இந்த விவாதத்துக்கு முடிவு கட்ட யாராவது எனக்கு உதவி செய்யுங்கள். அதாவது கடவுள் கைரன் பொல்லார்ட் தம்முடைய அணி தான் ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணி என்று நம்பிக் கொண்டிருக்கிறார். இப்போது அவரிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிகரமான ஐபிஎல் அணி என்பதை நான் காட்ட விரும்புகிறேன். அப்போதும் கைரன் பொல்லார்ட் கோப்பைகளைப் பற்றி பேச விரும்புகிறார். அவரது கருத்தின் படி சாதனைகளின் படி இது என்னுடைய 17வது கோப்பையாகும். ஆனால் பொல்லார்ட் 15 கோப்பைகளை மட்டுமே வென்றுள்ளார்”

“எனவே என்னை பிடிக்க நீங்கள் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும். எனவே என்னுடைய பெயருக்கு மரியாதை கொடுங்கள். நன்றி” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் மொத்தமாக நான் 17 கோப்பைகளை வென்றுள்ளேன் நீ எவ்வளவு கோப்பைகளை வென்றுள்ளாய்? என்று பிராவோ கேட்டதற்கு நான் அதையெல்லாம் கணக்கிடுவதில்லை என கூறிய பொல்லார்ட் நைசாக நழுவினார்.

இதையும் படிங்க:சுப்மன் கில் இல்ல, அவருக்கு இந்திய அணியில் பிரைட்டான வருங்காலம் காத்திருக்கு – சிஎஸ்கே வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்

முன்னதாக 2011 ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் பொல்லார்ட்டை அவுட்டாக்கிய ப்ராவோ பத்திரமாக விமானத்தில் நாடு திரும்புங்கள் என்று மைதானத்தில் ஜாலியாக கலாய்த்ததை யாரும் மறக்க முடியாது. அந்த வகையில் என்ன தான் ஐபிஎல் தொடரில் மும்பை – சென்னை ஆகிய எதிரெதிர் அணிகளில் விளையாடினாலும் அவர்கள் தொடர்ந்து நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் தம்முடைய நண்பனை சமயம் பார்த்து ப்ராவோ கலாய்க்கும் போது அதற்கு பொல்லார்ட் கொஞ்சம் கூட கோபித்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement