சுப்மன் கில் இல்ல, அவருக்கு இந்திய அணியில் பிரைட்டான வருங்காலம் காத்திருக்கு – சிஎஸ்கே வீரரை பாராட்டிய வாசிம் அக்ரம்

- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வந்த ஐபிஎல் 2023 டி20 தொடரின் சாம்பியன் பட்டத்தை எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை 5வது முறையாக வென்றது. குறிப்பாக குஜராத்துக்கு எதிராக அதன் சொந்த ஊரான அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற சென்னை ஐபிஎல் வரலாற்றின் வெற்றிகரமான அணி என்ற மும்பையின் சாதனை சமன் செய்தது. அந்த அணியின் வெற்றிகளில் கேப்டன் தோனி தலைமையில் ரவீந்திர ஜடேஜா முதல் பதிரனா வரை அனைத்து வீரர்களுமே தேவையான நேரங்களில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றினர்.

Ruturaj Gaikwad

- Advertisement -

அந்த வரிசையில் நம்பிக்கை நட்சத்திரம் ருதுராஜ் கைக்வாட் 590 ரன்களுடன் சென்னை அணிக்காக இந்த சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்தி 5வது கோப்பையை வென்றதும் தம்முடைய ஜெர்சியில் 5வது நட்சத்திரத்தை வரைந்து வெற்றியை உணர்வுபூர்வமாக கொண்டாடினார். மகாராஷ்டிராவை சேர்ந்த அவர் கடந்த 2020 சீசனில் முதல் முறையாக சென்னை அணிக்கு 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். அந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லீக் சுற்றுடன் வெளியேறிய சென்னையை கடைசி கட்ட போட்டிகளில் அட்டகாசமாக செயல்பட்ட அவர் புள்ளி பட்டியல் கடைசி இடத்தை பிடிக்கும் அவமானத்திலிருந்து காப்பாற்றினார்.

ஒளிமயமான எதிர்காலம்:
அதை விட 2021 சீசனில் 635 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பி வென்ற வீரராக சாதனை படைத்த அவர் சென்னை 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதன் காரணமாக இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு பெற்ற அவர் ஆரம்பத்தில் தடுமாறும் பெரும்பாலான வீரர்களை போல் சுமாராக செயல்பட்டதால் கழற்றி விடப்பட்டார். அதே போல கடந்த சீசனில் 368 ரன்களை மட்டுமே எடுத்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடிப்பதற்கு காரணமாகும் வகையில் சுமாராக செயல்பட்ட அவர் இந்த சீசனில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பி சென்னை 5வது கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியுள்ளார்.

Utkarsha-Pawar-and-Ruturaj

மேலும் கடந்த விஜய் ஹசாரே கோப்பையில் ஒரே ஓவரில் 7 சிக்ஸர்கள் அடித்தது உட்பட சதங்களையும் இரட்டை சதங்களையும் அடித்து உள்ளூர் கிரிக்கெட்டில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் அவர் இளம் வீரராக இருப்பதால் வரும் காலங்களில் இந்தியாவுக்காக 2வது வாய்ப்பில் அசத்துவார் என்று உறுதியாக நம்பலாம். இந்நிலையில் இந்த சீசனில் 890 ரன்கள் அடித்து ஆரஞ்சு தொப்பியை வென்று ஏற்கனவே நிலையான இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.

- Advertisement -

அதே போல கடந்த 4 ஐபிஎல் தொடரில் 3 சீசன்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய ருதுராஜுக்கும் இந்திய அணியில் ஒளிமயமான எதிர்காலம் இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். குறிப்பாக குவாலிபயர் 1 நாக் அவுட் போட்டியில் 60 (44) ரன்களை எடுத்து ஆட்டநாயகன் விருது வென்ற அவர் ஃபைனலிலும் 26 (16) ரன்கள் எடுத்து அழுத்தமான போட்டிகளில் அசத்தும் திறமையை கொண்டுள்ளதால் நிச்சயம் வருங்காலத்தில் அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அக்ரம் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Wasim-Akram

“அழுத்தமான போட்டியில் அவர் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அது போக உடலளவில் அவர் நன்கு ஃபிட்டாக உள்ள அவர் இளமையாக துடிதுடிப்புடன் சிறப்பாக ஃபீல்டிங் செய்கிறார். எனவே சென்னை மற்றும் இந்திய அணியை பொறுத்த வரை ருதுராஜுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க:வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அறுவைசிச்சை. தோனிக்கு டாக்டர்கள் போட்டுள்ள கண்டிஷன் – வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்

அதே நிகழ்ச்சியில் சுப்மன் கில் பற்றி முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் கூறியது பின்வருமாறு. “கில் மனதளவில் மிகவும் வலுவான வீரர். அவருக்கு சூழ்நிலைக்கு தகுந்தார் போல் எப்படி ரன்கள் அடிக்க வேண்டும் என்பது தெரியும். பொதுவாக பெரிய வீரர்கள் உச்சகட்ட ஃபார்மை எட்டியதும் ஓய மாட்டார்கள். அவர்கள் எப்போதும் விழிப்புடன் இருந்து அந்த ஃபார்மை அதிகமாக பயன்படுத்துவார்கள். அதே போல செயல்படும் கில் மும்பைக்கு எதிரான போட்டியில் குஜராத்தை தனியாளாக வெற்றி பெற வைத்தது அதற்கு சாட்சியாகும்” என்று கூறினார்.

Advertisement