வெற்றிகரமாக நடைபெற்று முடிந்த அறுவைசிச்சை. தோனிக்கு டாக்டர்கள் போட்டுள்ள கண்டிஷன் – வெளியான மெடிக்கல் ரிப்போர்ட்

Dhoni
- Advertisement -

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரில் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதோடு ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணியின் சாதனையையும் சிஎஸ்கே அணி சமன் செய்துள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியாக இருந்த கேள்வியே தோனி அடுத்த ஆண்டு விளையாடுவாரா? என்பது மட்டும் தான்.

Dhoni

- Advertisement -

அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடர் முடியும்போதே தோனி நிச்சயம் ரசிகர்களின் அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் தான் மேலும் ஒரு சீசனில் விளையாடுவேன் என்று உறுதி அளித்திருந்தார். இருப்பினும் அதற்கு இன்னும் 8-9 மாசம் அவகாசம் உள்ளதால் பொறுத்திருந்து முடிவை எடுப்பேன் என்றும் அதற்குள் காயம் எவ்வாறு இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்றும் தோனி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது போல தற்போது ஐபிஎல் தொடரானது நிறைவடைந்த கையோடு தோனி மும்பைக்கு சென்று தனது முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்திற்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெரும்பாலும் முழங்காலில் பெரிய அளவில் வலியை உணர்ந்த தோணி நிச்சயம் இந்த காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்தால் தான் அடுத்த சீசனில் விளையாட முடியும் என்பதனால் விரைவில் இந்த அறுவை சிகிச்சை செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Dhoni-1

இவ்வேளையில் இன்று காலை மும்பை சென்றடைந்த தோனி மருத்துவர் தின்ஷா பர்திவாலா என்ற சீனியர் டாக்டரின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டார். மும்பையில் உள்ள பிரபலமான மருத்துவமனையான கோகிலாபென் என்கிற மருத்துவமனையில் ரிஷப் பண்டிற்கு சிகிச்சை அளித்த அதே மருத்துவர் தான் தோனிக்கும் சிகிச்சை அளித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து டாக்டர்கள் தரப்பில் இருந்து தோனிக்கு சில கண்டிஷன்களும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள தோனி இன்னும் சில நாட்கள் ஓய்வில் இருப்பார் என்றும் அதனை தொடர்ந்து அவர் மீண்டும் பழைய இயல்பு நிலைக்கு திரும்ப சில நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : IPL 2023 : ஃபைனலில் அசத்தியதற்கு அவரோட சப்போர்ட் தான் காரணம், பதிரனாவை பந்தாடியது பற்றி – சாய் சுதர்சன் பேட்டி

அதோடு தோனி பழையபடி களத்தில் ஓடுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும் எனவே அதுவரை தனது முழங்கால் காயத்தை அவர் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement