வீடியோ : எப்போதுமே நான் சிஎஸ்கே பிளேயர் தான், ஜெர்ஸியை மாற்றிய லார்ட் தாகூர் – தோனியிடம் ஆட்டோகிராப் வாங்கிய ரிங்கு

Chahar Thakur CSK
- Advertisement -

எதிர்பாராத திருப்பங்களுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னையை அதன் சொந்த ஊரான சேப்பாக்கத்தில் 2012 ஃபைனலுக்கு பின் 11 வருடங்கள் கழித்து தோற்கடித்த கொல்கத்தா பிளே ஆப் சுற்று வாய்ப்பை 20 – 30% தக்க வைத்துக் கொண்டது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் திணறிய நிலையில் அதிகபட்சமாக சிவம் துபே 48* (34) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 12, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 1, வெங்கடேஷ் ஐயர் 9 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தீபக் சஹாரின் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் ரிங்கு சிங் 54 (43) ரன்களும் கேப்டன் நிதிஷ் ராணா 57* (44) ரன்களும் எடுத்து 18.3 ஓவரிலேயே வெற்றி பெற வைத்தனர். அதனால் டெல்லிக்கு எதிரான தன்னுடைய கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலைமைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

என்றும் சிஎஸ்கே பிளேயர்:
அப்படி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த அந்த போட்டியின் முடிவில் இந்த சீசன் முழுவதும் லீக் சுற்றில் தங்களுக்கு அற்புதமான ஆதரவு கொடுத்த சேப்பாக்கம் ரசிகர்களுக்கு தோனி தலைமையிலான சென்னை அணியினர் நன்றி தெரிவித்து கையொப்பமிட்ட ஜெர்சி, பந்து போன்ற உபகரணங்களை பரிசாக கொடுத்தனர். அதை விட போட்டி முடிந்ததும் கொல்கத்தா அணிக்காக விளையாடும் இந்திய வீரர் ஷார்துல் தாகூர் மற்றும் சென்னை அணிக்காக விளையாடும் தீபக் சஹார் ஆகியோர் தங்களது உடம்பில் அணிந்திருந்த ஜெர்சியை கழற்றி ஒருவருக்கொருவர் மாற்றிக்கொண்டு அன்பை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக மும்பையைச் சேர்ந்த ஷார்துல் தாகூர் உள்ளூர் அளவில் சிறப்பாக செயல்பட்ட போதிலும் ஐபிஎல் தொடரில் எந்த அணியிலும் நிலையான வாய்ப்புகள் பெறாமல் தவித்து வந்தார். அந்த நிலையில் 2018இல் சென்னை அணிக்காக விளையாடிய அவர் தோனியின் தலைமையில் அசத்தும் பல வீரர்களில் ஒருவராக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி 16 விக்கெட்டுகளை சாய்த்து 3வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அதே போல் 2021 சீசனிலும் அதிக விக்கெட்களை (21) எடுத்த சென்னை வீரராக சாதனை படைத்த அவர் 4வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அப்படி சென்னை அணியில் அசத்திய காரணத்தால் இந்தியாவுக்காகவும் 3 விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சமீப காலங்களில் “லார்ட் தாக்கூர்” என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடும் அளவுக்கு காபா, ஓவல் மைதானங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக சரித்திர வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் கிடைக்கும் வாய்ப்புகளில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். ஆனாலும் கடந்த சீசனில் நடைபெற்ற மெகா ஏலத்தில் சென்னை தக்க வைக்க முடியாமல் தவற விட்ட அவரை கொல்கத்தா பெரிய தொகைக்கு வாங்கியது.

அந்த நிலையில் என்ன தான் கொல்கத்தா அணிக்கு போனாலும் தமக்கு தோனி போன்ற மகத்தான கேப்டன் தலைமையில் விளையாடுவதற்கு வாய்ப்புகளை கொடுத்து இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னை அணியின் நன்றி மறக்காத தாகூர் நேற்றைய போட்டியின் முடிவில் கடந்த சீசங்களில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை நினைவு கூர்ந்தார்.

இதையும் படிங்க:IPL 2023 : முக்கிய மேட்ச்ல நல்லா பழி வாங்கிட்டீங்க ரொம்ப நன்றி – நட்சத்திர வீரர் மீது சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

மேலும் அந்த காலகட்டங்களில் வேகப்பந்து வீச்சு துறையில் தன்னுடைய பார்ட்னராக இருந்த தீபக் சஹர் நட்பை மறக்காமல் “என்றும் நான் சிஎஸ்கே பிளேயர்” என்ற வகையில் அவருடைய ஜெர்ஸியை தாகூர் மாற்றி அணிந்து கொண்டது சென்னை ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அது போக கொல்கத்தா அணி லேட்டஸ்ட் பினிஷராக திகழும் ரிங்கு சிங் மற்றும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆகியோரும் தங்களது ரோல் மாடலான தோனியிடம் அவருடைய ஜெர்சியில் ஆட்டோகிராப் வாங்கினர்.

Advertisement