IPL 2023 : முக்கிய மேட்ச்ல நல்லா பழி வாங்கிட்டீங்க ரொம்ப நன்றி – நட்சத்திர வீரர் மீது சிஎஸ்கே ரசிகர்கள் அதிருப்தி

CSK vs KKR Jadeja
- Advertisement -

அனல் பறந்து வரும் ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 61வது லீக் போட்டியில் சென்னையை அதன் சொந்த ஊரான சேப்பாக்கத்தில் 2012 ஃபைனலுக்கு பின் 11 வருடங்கள் கழித்து 6 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த கொல்கத்தா பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை 30% தக்க வைத்துள்ளது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 144/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சிவம் துபே 48* (34) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை சாய்த்தனர்.

அதை துரத்திய கொல்கத்தாவுக்கு ஜேசன் ராய் 12, ரஹ்மத்துல்லா குர்பாஸ் 1, வெங்கடேஷ் ஐயர் 9 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தீபக் சஹாரின் வேகத்தில் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் ரிங்கு சிங் 54 (43) ரன்களும் நிதிஷ் ராணா 57* (44) ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். முன்னதாக இந்த போட்டியில் நேரம் செல்ல செல்ல பிட்ச் மெதுவாக மாறும் என்பதால் அதற்கு முன்பாகவே பெரிய ஸ்கோரை எடுத்து விட வேண்டும் என்ற முனைப்புடன் டாஸ் வென்ற கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

- Advertisement -

ரொம்ப நன்றி:
ஆனால் ருதுராஜ் 17 (13), கான்வே 30 (28), ரகானே 16 (11) என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் போராடி அவுட்டானார்கள். ஆனால் மிடில் ஓவர்களில் ராயுடு 4 (7) மொய்ன் அலி 1 (2) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சுனில் நரேன் சுழலில் சிக்கி பெரிய பின்னடைவை கொடுத்தனர். அதனால் 72/5 என சரிந்த சென்னை 130 ரன்களை தண்டுமா என்று அந்த அணி ரசிகர்கள் கவலையடைந்த போது நங்கூரமாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா 1 சிக்சர் மட்டுமே அடித்து சிங்கிள், டபுள் ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாட முடியாமல் திண்டாடினார்.

கடந்த சீசனில் அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறிய அவர் இந்த சீசனில் பந்து வீச்சில் அசத்தலாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறார். அதே தடுமாற்றத்துடன் இந்த போட்டியிலும் 6வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் கடைசி வரை அதிரடியை துவக்காத அவர் சரவெடியாக செயல்பட வேண்டிய டெத் ஓவர்களில் முழுமையாக 6 ஓவர்களுக்கு சமமான 24 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்களை 83.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து கடைசி ஓவரில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தார். அவரது மோசமான ஆட்டத்தாலேயே வெற்றிக்கு போராடும் எக்ஸ்ட்ரா 20 – 30 ரன்கள் சென்னை எடுக்க தவறியது. முன்னதாக இந்த சீசனில் தோனி பேட்டிங் செய்வதை பார்க்க வேண்டும் என்பதற்காக ஜடேஜா களமிறங்கிய முதல் பந்திலேயே அவுட்டாக வேண்டும் என்று ரசிகர்கள் வெளிப்படையாக கோரிக்கை வைத்தனர்.

- Advertisement -

அது சரியானதல்ல என்றாலும் தோனியை பார்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான அன்பால் ரசிகர்கள் அவ்வாறு நடந்து கொண்டதில் தவறுமில்லை. ஆனாலும் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொண்ட ஜடேஜா மனதுக்குள் வலியுடன் இருப்பதாக கடந்த போட்டியில் ஒரு ரசிகர் போட்ட ட்வீட்டை லைக் செய்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த நிலையில் இந்த போட்டியில் “நான் அவுட்டானால் தானே தோனி விளையாடுவதை பார்ப்பீர்கள்” என்ற வகையில் கடைசி நேரத்தில் அவர் பழிவாங்குவது போல பேட்டிங் செய்ததாக நிறைய சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர்.

ஒருவேளை தம்மால் அதிரடி காட்ட முடியவில்லை என்றால் முன்கூட்டியே அவுட்டாகி இந்த சீசனில் நல்ல ஃபார்மில் இருக்கும் தோனிக்கு அவர் வழி விட்டிருக்கலாம் என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இங்கு விஷயம் என்னவெனில் நேற்றைய போட்டியில் வென்றிருந்தால் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று டாப் 2 இடத்தைப் பிடித்து குவாலிபயர் 1 போட்டிக்கு சென்னை தகுதி பெற்றிருக்கும்.

இதையும் படிங்க:வீடியோ : ரசிகனை போல நெஞ்சில் ஆட்டோகிராப் வாங்கிய கவாஸ்கர் – முழங்கால் வலியுடன் தமிழக ரசிகர்களுக்கு தல தோனி நன்றி

ஆனால் தற்போது ஜடேஜாவின் மோசமான ஆட்டத்தால் அந்த வாய்ப்பு 70% பறிபோனதுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கே டெல்லிக்கு எதிரான கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது. அதனால் அடுத்து வரும் போட்டிகளிலாவது அதிரடியாக விளையாடுங்கள் என்பதை சென்னை ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

Advertisement