வீடியோ : இதாங்கா வரலாற்றின் மகத்தான கேட்ச், சூப்பர்மேனாக பறந்த இங்கிலாந்து வீரர் – வியந்து பாராட்டிய டிகே

Catch 3
- Advertisement -

இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான டி20 ப்ளாஸ்ட் தொடரின் 2023 சீசனில் ஜூன் 16ஆம் தேதியான நேற்று நடைபெற்ற ஒரு லீக் போட்டியில் சசக்ஸ் மற்றும் ஹேம்ப்ஷைர் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற ஹேம்ஸ்ஷைர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 183/6 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஆலிவர் கார்ட்டர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 64 (33) ரன்களும் ரவி போபாரா 30 (29) ரன்களும் மைக்கேல் பர்கஸ் 26 (24) ரன்களும் எடுக்க ஹேம்ப்ஷைர் சார்பில் அதிகபட்சமாக ஜான் டர்னர் மற்றும் ஹோவல் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 184 என்ற கடினமான இலக்கை துரத்திய ஹேம்ப்ஷைர் அணிக்கு பென் மெக்டெர்மோட் 2 (4) ஜேம்ஸ் வின்ஸ 8 (6) என அதிரடி தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டாபி ஆல்பர்ட் கோல்டன் டக் அவுட்டாகி சென்றார். போதாக்குறைக்கு ராஸ் வைட்லே 1 (5) ரன்னில் நடையை கட்டியதால் 24/4 என சரிந்த அந்த அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இருப்பினும் 5வது விக்கெட்டுக்கு 51 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த ஜோ வேதர்லி 33 (28) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சூப்பர்மேன் கேட்ச்:
மேலும் மறுபுறம் அதிரடியாக செயல்பட்ட லியான் டாசன் அரை சதமடித்து வெற்றிக்கு போராடிய நிலையில் முக்கிய நேரத்தில் 4 பவுண்டரி 5 சிக்சருடன் 59 (34) ரன்கள் ஆட்டமிழந்தார். அதே போல அடுத்து வந்த பென்னி ஹோவல் தனது பங்கிற்கு 4 பவுண்டரியை பறக்க விட்டு 25 (14) ரன்கள் எடுத்து சவாலை கொடுத்தார். குறிப்பாக டைமல் மில்ஸ் வீசிய 14வது ஓவரின் 5வது பந்தில் ஃபுல் ஷாட்டை அடித்த அவர் சிக்ஸர் பறக்க விட முயற்சித்தார்.

அதிரடியாக அவர் அடித்த வேகத்தில் பவுண்டரி செல்லும் அளவுக்கு வேகமாக சென்ற பந்தை டீப் ஸ்கொயர் பகுதியில் இருந்து பார்த்துக் கொண்டே வேகமாக ஓடி வந்த இங்கிலாந்து வீரர் பிராட்லி கர்ரி கவனத்தை சிதற விடாமல் சரியான சமயத்தில் சூப்பர் மேன் போல தாவி பிடித்து சிக்ஸரை தடுத்து வாய் மீது கை வைக்கும் அற்புதமான கேட்ச் பிடித்தார். குறிப்பாக சரியான சமயத்தில் பேலன்ஸ் செய்து தாவிய அவர் ஓடி வந்த வேகத்தில் கிட்டத்தட்ட 4 – 5 அடிகள் காற்றிலேயே சூப்பர்மேனை போல பறந்து பந்தை பிடித்தார்.

- Advertisement -

அதை பவுண்டரி எல்லைக்குள் நின்று மிகவும் அருகில் பார்த்த ஒரு மைதான பராமரிப்பாளர் வாயை திறந்து என்ன ஒரு அற்புதமான கேட்ச் என்ற வகையில் பாராட்டிய நிலையில் இதர வீரர்களும் அவரை கட்டிப் பிடித்து கைதட்டி பாராட்டினர். மறுபுறம் அந்த நம்ப முடியாத செயல்பாடுகளை பார்த்து ஆச்சரியமடைந்த பேட்ஸ்மேன் வியப்புடன் பெவிலியன் நோக்கி அவுட்டாகி சென்றார். அதே போல மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று அவருக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்த நிலையில் இது வரலாற்றில் மிகவும் நம்ப முடியாத ஒரு கேட்ச் என வர்ணணையாளர்கள் நேரலையில் பாராட்டினர்.

அதே போல “இது வரலாற்றின் மிகச்சிறந்த கேட்ச்களில் ஒன்று என தனது ட்விட்டரில் பாராட்டியுள்ள இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் அதை பிடிப்பதற்காக அவர் எவ்வளவு தூரம் ஓடி வந்தார் என்பதை பாருங்கள் ப்பா” என பதிவிட்டு வியப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:Ashes 2023 : ஆஸியை மிரட்ட 85 வருட ஆஷஸ் சாதனையை தூளாக்கிய இங்கிலாந்து – ஆனாலும் விமர்சித்த கெவின் பீட்டர்சன், காரணம் என்ன

பொதுவாக சாதாரண கேட்ச் பிடித்தாலே எளிதாக வெற்றி பெறலாம் என்ற நிலையில் இந்த அற்புதமான கேட்ச் காரணமாக இறுதியில் கிறிஸ் வுட் 15* (12) ரன்களும் நாதன் எலிஸ் 15 (6) ரன்கள் எடுத்தும் 20 ஓவர்களில் ஹேம்ப்ஷைர் அணியை 177/9 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சசக்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அபாரமான கேட்ச் பிடித்த அதே பிராட்லி கர்ரி 3 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

Advertisement