வீடியோ : அம்பயரின் தொப்பையில் பந்தால் அடித்து கிண்டல் செய்த பாபர் அசாம் – பின்னணியை கேட்டு சிரிக்கும் ரசிகர்கள்

Umpire Babar Azam
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து கிண்டல்களுக்கும் விமர்சனத்திற்கும் உள்ளானது. ஏனெனில் தார் ரோட் போல இருந்த ராவில்பிண்டி மைதானத்தில் இங்கிலாந்திடம் சரமாரியாக அடி வாங்கிய அந்த அணி சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்வதற்கு டிசம்பர் 9ஆம் தேதியான்று துவங்கிய 2வது போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. இம்முறை சற்று சுழலுக்கு சாதகமாக அமைந்த முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 281 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் அசத்திய அப்ரார் அகமது 7 விக்கெட்களை சாய்த்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் ஷாகீல் 63 ரன்களும் எடுத்தது தவிர்த்து இதர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 202 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்துக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றினாலும் பென் டன்கட் 79 ரன்களும் ஹரி ப்ரூக் சதமடித்து 108 ரன்களும் குவித்ததால் தப்பினாலும் 275 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

தொப்பையில் அடி:
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து 352 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சபிக் 45 ரன்களும் முகமத் ரிஸ்வான் 30 ரன்களும் இமாம்-உல்-ஹக் 60 ரன்களும் ஷாகீல் 54* ரன்களும் எடுத்ததால் 4வது நாள் ஆட்ட நேர முடிவில் 198/4 ரன்களில் விளையாடி வருகிறது. தற்சமயத்தில் இரு தரப்புக்கும் வெற்றி சமமாக இருப்பதால் வெல்லப் போவது யார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஒரு தருணத்தில் வழக்கம் போல நடுவரது அருகே நின்று தன்னுடைய பார்ட்னர் அசாத் சபிக் உடன் பேசிக் கொண்டிருந்தார்.

அதை பக்கவாட்டில் இருந்து கேமராமேன் படம் பிடித்த போது அம்பயர் மரைஸ் எரஸ்மஸின் தலை தெரியாவிட்டாலும் வயிறு மட்டும் வெளியே தெரிந்தது. ஆனால் அதை பக்கவாட்டு கோணத்திலிருந்து பார்க்கும் அனைவருக்கும் பாபர் அசாம் வயிறு போல தெரிந்தது. அதனால் சமீப காலங்களில் ரன்களை குவிக்க தடுமாறி வரும் அவர் முழுமையான ஃபிட்னெஸ் இல்லாமல் தொப்பையுடன் இருப்பதாக அந்த ப்ரேமை கச்சிதமாக படம் பிடித்த சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கலாய்த்து ட்ரெண்ட் செய்தார்கள்.

- Advertisement -

அதை எப்படியோ பாபர் அசாம் தெரிந்து கொண்ட நிலையில் 3வது நாள் ஆட்டம் நடைபெற்ற போது ஒரு பந்தை ஃபீல்டிங் செய்த இமாம்-உல்-ஹக் ரன் அவுட் செய்வதற்காக ஸ்டம்ப்புகளை நோக்கி எறிந்தார். ஆச்சரியப்படும் வகையில் அந்த பந்து ஃபிட்ச்சான பின் ஸ்டம்ப்பில் படாமல் நேராக அதன் அருகே நின்று கொண்டிருந்த அம்பயர் மரைஸ் எரைஸ்மஸ் அவர்களின் பெரிய தொப்பையில் பட்டது. அதனால் வலியை போக்குவதற்கு தனது வயிற்றை லேசாக தடவிய அவரது அருகே வந்த பாபர் அசாம் மீண்டும் அவரின் அருகே நின்று “இப்போது தேவையான படங்களை எடுத்து கலாய்த்துக் கொள்ளுங்கள்” என்ற வகையில் போஸ் கொடுத்தார்.

இதையும் படிங்க: இந்திய அணியில் இனிமேல் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் – ஓரங்கட்டப்பட இருக்கும் முன்னணி வீரர்

அத்தோடு நிற்காமல் இறுதியில் அம்பயரின் தொப்பையில் லேசாக ஒரு தட்டு தட்டி விட்டு சிரித்துக் கொண்டே நகர்ந்த பாபர் அசாமை பார்த்து வர்ணனை செய்த மைக்கேல் ஆத்தர்டன் போன்ற முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் வயிறு குலுங்க சிரித்தார்கள். அத்துடன் அந்த நிகழ்வுக்கு சமூக வலைகளில் ட்ரெண்ட்டாகி காரணமாக அமைந்த தொப்பை புகைப்படத்தையும் தன்னுடைய மொபைல் போனிலிருந்து மைக்கேல் ஆத்தர்டன் நேரலையில் அனைவருக்கும் காட்டினார்.

Advertisement