இந்திய அணியில் இனிமேல் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது கஷ்டம் தான் – ஓரங்கட்டப்பட இருக்கும் முன்னணி வீரர்

India Dhawan
- Advertisement -

இந்திய அணி ஆஸ்திரேலியாலில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையறுதி போட்டியோடு வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது வங்கதேசத்தில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது ரசிகர்கள் மத்தியில் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் பலம் வாய்ந்த இந்திய அணி இப்படி வங்கதேச அணியிடம் தோல்வியை சந்தித்து இருப்பது பல்வேறு கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

IND vs BAN

- Advertisement -

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான அணியையாவது சரியாக தேர்வு செய்ய வேண்டும் என்பதனால் இந்த தொடரில் இருந்தே இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகமானது கவனிக்க துவங்கியுள்ளது. அந்த வகையில் வீரர்கள் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தினால் கட்டாயம் அணியிலிருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

ஏனெனில் இந்திய அணி அடுத்தடுத்து ஐசிசி தொடர்களை தவற விட்டு வருவது பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் நிச்சயம் அணி நிர்வாகம் இனிமேல் எடுக்கப்போகும் முடிவுகள் அதிரடியாக இருக்கும் என்பதனால் எந்த வீரருக்குமே நிர்வாகம் தரிசனம் காட்டாது என்று தெரிகிறது. அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிகார் தவான் ஒருநாள் போட்டிகளுக்கான துவக்க வீரருக்கான இடத்தை விரைவில் தவறவிடுவார் என்று தெரிகிறது.

Dhawan

ஏனெனில் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகளிலுமே விளையாடிய தவான் ஒருமுறை கூட 10 ரன்களை கடக்கவில்லை. மூன்று போட்டிகளிலுமே அவர் முறையே 3, 8, 7 என்கிற சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

அதே வேளையில் ரோகித்துக்கு பதிலாக இடம் பிடித்த இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்ததால் சேவாக் போன்று அதிரடியாக விளையாடும் ஒரு துவக்க வீரரை அணியில் வைத்திருக்க வேண்டும் என்பதன் காரணமாக தவானுக்கு பதிலாக இனி இஷான் கிஷனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் சுப்மன் கில்லும் ஒருநாள் போட்டிகளுக்கான துவக்க வீரருக்கான போட்டியில் இருப்பதினால் தவான் கழற்றிவிடப்பட்டு அந்த இடத்தில் இவர்கள் இருவருக்கும் தான் இனிவரும் தொடர்களில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : PAK vs ENG : 2வது டெஸ்டில் தராசு போல் சமமாக நிற்கும் வெற்றி, முக்கிய நேரத்தில் மாஸ் காட்டி வெல்லப்போவது யார் – விவரம் இதோ

அதே போன்று 2019-ஆம் ஆண்டு வரை 100-க்கும் மேற்பட்ட அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய தவான் இந்த ஆண்டு முழுவதுமே 75-க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியது மட்டும் இன்றி சொற்ப ரன்களே விளாசியதால் அவரை ஒருநாள் கிரிக்கெட்டில் நிராகரிக்க அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement