வீடியோ : வெறித்தமான ஓடி ரன் அவுட்டான பாபர் அசாம் – பாகிஸ்தானின் 2வது இன்சமாமாக பரிதாப சாதனை

Babar azam run out
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் பாகிஸ்தான் முதல் போட்டியில் சந்திக்க வேண்டிய தோல்வியிலிருந்து கடைசி நேரத்தில் போதிய வெளிச்சமின்மையால் தப்பின் டிரா செய்தது. அந்த நிலையில் ஜனவரி 2ஆம் தேதியன்று கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் 2வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 449 ரன்கள் குவித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுத்து வருகிறது. குறிப்பாக தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் 134 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தொடக்க வீரர்கள் டாம் லாதம் 71 ரன்களும் டேவோன் கான்வே சதமடித்து 122 ரன்களும் குவித்து அசத்தினர்.

இருப்பினும் அடுத்து வந்த கேன் வில்லியம்சன் 36, ஹென்றி நிக்கோலஸ் 26, டார்ல் மிட்சேல் 3, மைக்கேல் பிரேஸ்வெல் 0 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி பாகிஸ்தான் அசத்தியது. மேலும் விக்கெட் கீப்பர் டாப் ப்ளண்டல் 51 ரன்களில் அவுட்டானதும் விரைவில் அவுட்டாகி விடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்துக்கு 345/9 என்ற நிலைமையில் ஜோடி சேர்ந்த மாட் ஹென்றி – அஜஸ் படேல் ஆகியோர் யாருமே எதிர்பாராத வகையில் நங்கூரமாக நின்று பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுத்தனர்.

- Advertisement -

சொதப்பல் ரன் அவுட்:
அவர்களைப் பிரிக்க கேப்டன் பாபர் போட்ட திட்டங்களை எளிதாக உடைத்து 10வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு அவமானத்தைக் கொடுத்த அந்த ஜோடியில் மாட் ஹென்றி 68* ரன்கள் எடுத்த நிலையில் அஜஸ் படேல் ஒரு வழியாக 38 ரன்களில் அவுட்டானார். பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அப்ரார் அகமது 4 விக்கெட்கள் எடுத்தாலும் டெயில் எண்டர்கள் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கும் அளவுக்கு சுமாராக செயல்பட்ட அந்த அணியை வழக்கம் போல ரசிகர்கள் கலாய்த்தனர். ஆனால் அதை விட பேட்டிங்கை துவங்கிய அந்த அணிக்கு சபிக் 19, ஷான் மசூட் 20 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலே சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.

அதனால் 56/2 என தடுமாறிய அந்த அணிக்கு அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டார். அதனால் 3வது விக்கெட்டுக்கு 43 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்து கொண்டிருந்த அவர் 25வது ஓவரில் எதிர்புறம் பேட்டிங் செய்து கொண்டிருந்த இமாம்-உல்-ஹக் மிட் விக்கெட் திசையில் அடித்து விட்டு வேகமாக ரன்கள் எடுக்க அழைத்ததால் வெறித்தனமாக ஓடினார். அந்த வேகத்தில் இருவரும் 2 ரன்கள் எடுத்த நிலையில் 3வது ரன்னை எடுக்க முயன்ற இமாம்-உல்-ஹக் அதற்கான அழைப்பையும் எடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் கடைசி நொடியில் ஃபீல்டர் பந்தை பிடித்ததை கவனித்த அவர் ஓடினால் ரன் அவுட்டாகி விடுவோம் என்ற எண்ணத்துடன் பாபர் அசாமை பார்க்காமலேயே உடனடியாக பின் வாங்கினார். ஆனால் தன்னுடைய பார்ட்னர் அழைத்து விட்டார் என்பதற்காக முழுமையாக நம்பி அவரை மட்டும் பார்த்த பாபர் அசாம் பந்தை பார்க்க தவறி பாதி தூரத்துக்கு சென்ற பின்பு தான் பார்த்தார். அதற்குள் பந்தை பிடித்த நியூசிலாந்து அணியினர் கட்சிதமாக ரன் அவுட் செய்து விட்டார்கள்.

அதனால் 24 ரன்களில் அவுட்டான பாபர் அசாம் கடுமையான கோபம் மற்றும் ஏமாற்றத்துடன் தலையை அசைத்துக் கொண்டே பெவிலியன் நோக்கி திரும்பினார். இருப்பினும் அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்யும் இமாம்-உல்-ஹக் 74* எடுத்து விளையாடி வரும் நிலையில் 2வது நாள் முடிவில் பாகிஸ்தான் 154/3 என்ற ஸ்கோருடன் இப்போட்டியிலும் தடுமாறி வருகிறது.

- Advertisement -

முன்னதாக அந்த இடத்தில் இருவர் மீதும் தவறு இருந்தாலும் பந்தை பார்க்காமல் முழுமையாக ஓட்டத்தில் மட்டும் கவனம் செலுத்திய பாபர் அசாம் சொதப்பலே ரன் அவுட்டுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதனால் வழக்கம் போல அந்த பாகிஸ்தான் ஜோடியை சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். சொல்லப்போனால் வரலாற்றில் வயிறு குலுங்க சிரிக்கும் அளவுக்கு ரன் அவுட்டாவதில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சாம்-உல்-ஹக் மிகவும் பிரபலமாவார்.

இதையும் படிங்கவீடியோ : தோனி போலவே வெகுதூரம் ஓடி அபார கேட்ச் பிடித்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்த இஷான் கிசான்

அந்த வகையில் தன்னுடைய அறிமுகத்துக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ரன் அவுட்டான பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்து வரும் பாபர் அசாமை 2வது இன்சமாம் என்று ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். அந்த பட்டியல்:
1. பாபர் அசாம் : 6
2. அசார் அலி/யாசிர் ஷா/ முகமது அப்பாஸ் : தலா 3

Advertisement