வீடியோ : 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை தெறிக்கவிட்ட காட்டடி மன்னன் ரசல் – முரட்டு அடியால் ரசிகர்கள் வியப்பு

Andre Russell Sixty
- Advertisement -

நூற்றாண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் டிராவில் முடிந்ததால் ரசிகர்களை கவர்வதற்காக துவங்கப்பட்ட ஒரு நாள் கிரிக்கெட் 90களில் மிகவும் பிரபலமடைந்தது. இருப்பினும் ஒரு நாள் முழுவதும் அமர்ந்து பார்க்க முடியாத ரசிகர்களுக்காக 21ஆம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகள் பரபரப்பான விருந்துகளை படைப்பதால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டை பின்னுக்கு தள்ளி நம்பர் ஒன் கிரிகெட்டாக உருவாகியுள்ளது. அதை பார்த்து தொடங்கப்பட்ட ஐபிஎல் போன்ற டி20 தொடர்கள் சர்வதேச டி20 கிரிக்கெட்டை மிஞ்சும் அளவுக்கு ஓவருக்கு ஓவர் அனல் பறக்கும் திரில்லர் தருணங்களை விருந்தாக படைத்து ரசிகர்களை தன் வசப்படுத்தியுள்ளது. ஆனால் அதையும் பார்க்க முடியாமல் அதிலும் புதுமை காணும் வகையில் 10 ஓவர் கிரிக்கெட், 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட் என புது புது தொடர்கள் இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இந்த வருடம் வெஸ்ட் இண்டீஸ் வாரியம் உருவாக்கியுள்ள புதிய தொடர் தான் “சிக்ஸ்ட்டி”. 10 ஓவர்கள் அதாவது இரு அணிகளுக்கும் தலா 60 பந்துகளை கொண்ட போட்டிகளாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடர் மற்ற தொடர்களை காட்டிலும் மெதுவாக பந்து வீசினால் அதற்கு தண்டனையாக உள்வட்டத்துக்கு வெளியே ஒரு ஃபீல்டர் குறைக்க படுவர், போட்டியின் எந்த நேரத்திலும் எதிர்பாராத வகையில் கிடைக்கும் பிரீ ஹிட், அதை ரசிகர்கள் ஆன்லைன் வாயிலாக தேர்வு செய்வது போன்ற புதிய விதிமுறைகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

மிரட்டிய ரசல்:
இந்த தொடரை பிரபலப்படுத்துவதற்காக இந்த தொடரின் வெற்றியாளருக்கு வழங்கப்படும் கோப்பைக்கு டி20 கிரிக்கெட்டின் சச்சின் டெண்டுல்கராக கருதப்படும் கிறிஸ் கெய்லின் பட்டப் பெயரான “யுனிவர்சல் பாஸ் கோப்பை” என்று பெயரிடப்பட்டுள்ளது. கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடரில் பங்கேற்கும் 6 அணிகள் விளையாடும் இந்த தொடர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆகஸ்ட் 27ஆம் தேதியான நேற்று பஸ்ஸட்ரி நகரில் நடைபெற்ற 9வது போட்டியில் த்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பட்ரியட்ஸ் ஆகிய அணிகள் மோதின.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த த்ரிபாங்கோ அணிக்கு தொடக்க வீரர் டிம் சைபர்ட் 22 (13) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது களமிறங்கிய வெஸ்ட் இண்டீசின் காட்டடி மன்னர் ஆன்ட்ரே ரசல் தனக்கே உரித்தான பாணியில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே சரவெடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குறிப்பாக ட்ரேக்ஸ் வீசிய 7வது ஓவரின் கடைசி 4 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் ஜஃகேசர் வீசிய 8வது ஓவரின் முதலிண்டு பந்துகளிலும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். அப்படி 39வது பந்து முதல் 44வது பந்து வரை தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்சர்களை பறக்க விட்ட அவர் ரசிகர்களை மகிழ்வித்து மொத்தமாக வெறும் 24 பந்துகளில் 5 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் 72 (24) ரன்களை 300 என்ற வெறித்தனமான ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கி அவுட்டானார்.

- Advertisement -

த்ரில் போட்டி:
அவருடன் டின் வெப்ஸ்ட்டர் 22 (10) ரன்களும் பிரசன்னா 19 (5) ரன்களும் அடித்ததால் நிர்ணயிக்கப்பட்ட 60 பந்துகளில் த்ரிபாங்கோ 155/5 ரன்களை குவித்தது. அதைத் தொடர்ந்து 156 ரன்களை துரத்திய செயின்ட் கிட்ஸ் அணிக்கு ஆண்ட்ரே பிளட்சர் 33 (15) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க எவின் லெவிஸ் 7 (5), தேவால்ட் ப்ரேவிஸ் 0 (1) என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் 1 பவுண்டரி 7 சிக்சரை பறக்க விட்ட ஷாபின் ரூத்தர்போர்ட் வெறும் 15 பந்துகளில் 50 ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் டாமினிக் ட்ரெக்ஸ் 2 பவுண்டரி 4 சிக்சர்களுடன் அதிரடியாக 33* (10) ரன்கள் எடுத்த போதிலும் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 19* (16) ரன்களை எடுத்தது பின்னடைவாக அமைந்தது போல் 60 பந்துகளில் செயின்ட் கிட்ஸ் போராடி 152/4 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் வெறும் 3 ரன்கள் வித்தியாசத்தில் த்ரிபங்கோ நைட் ரைடர்ஸ் திரில் வெற்றி பெற்றது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : ப்ரஸ்மீட்டில் வம்பிழுத்த பாக் பத்திரிகையாளர் – தரமான பதிலடி கொடுத்த ரோஹித் சர்மா

இந்த தொடரின் கடைசி லீக் போட்டி இன்று நடைபெறும் நிலையில் அதன் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக ஆகஸ்ட் 29ஆம் தேதியான நாளை நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

Advertisement