கொஞ்சம் நேரம் தாக்கு பிடிக்க முடியாதா ? என்னா விளையாடுறாங்க இவங்க ? – வாஷிங்க்டன் சுந்தர் தந்தை கோபம்

Sundar-1
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்து தொடரை 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு அடுத்த 3 போட்டிகளையும் இந்திய அணி தொடர்ந்து கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்சில் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட 160 ரன்கள் முன்னிலை அடைந்தது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களில் நாட் அவுட்டாக பெவிலியன் திரும்பினார்.

அவர் சதத்தை தவறவிட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியிலும், சென்னையில் நடைபெற்ற போட்டியிலும் அவர் சதத்தை தவறவிட்ட நிலையில் தற்போது கைக்கு அருகில் இருந்த சதத்தை அவர் இழந்தது ரசிகர்களே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sundar-2

இந்நிலையில் தன் மகன் சதமடிக்காதது குறித்து ஏற்கனவே ஆஸ்திரேலிய தொடரின் போதே வருத்தம் தெரிவித்து இருந்த அவரது தந்தை தற்போது தவற விடப்பட்ட இந்த சதம் குறித்து பேசுகையில் : இந்த போட்டியில் டெய்ல் எண்டர்கள் என்ன செய்தார்கள் என்று அனைவரும் பார்த்திருப்பீர்கள். கொஞ்ச நேரம் கூட அவர்களால் தாக்குப் பிடித்து இருக்க முடியாதா ? டெய்ல் எண்டர்களால் நான் ஏமாற்றம் அடைந்தேன்.

sundar 2

வெற்றிக்கு 10 தேவை என்று இருந்திருந்தால் கூட இது பெரிய தவறல்ல. தற்போது லட்சக்கணக்கான இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் கற்றுக் கொள்ளக் கூடாது என்று அவர் தந்தை காட்டமாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement