இனிமே அவங்க 2 பேர் மேலயும் அதிகளவு பிரஷர் இருக்கும். பி.சி.சி.ஐ அவங்கள கட்டம் கட்டிட்டாங்க – வாசிம் ஜாபர் கருத்து

Jaffer
- Advertisement -

இந்திய அணி அண்மையில் இங்கிலாந்து ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 209 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்துள்ளது. இதன் காரணமாக தற்போது இந்திய அணியின் மீதும் இந்திய அணியின் வீரர்கள் மீதும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

IND-vs-AUS

- Advertisement -

அதோடு டெஸ்ட் கிரிக்கெட்டில் இனிவரும் தொடர்களில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்த கையோடு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் புஜாரா ஆகியோர் இந்திய அணியில் இடத்தை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் : ரோகித் சர்மா இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் அடைந்த தோல்விக்கு பிறகு தன்னுடைய கேப்டன் பொறுப்பை துறக்கலாமா? என்கிற முடிவுக்கு வந்திருப்பதாக கேள்விப்பட்டேன். எனவே அவரை நீண்ட நாட்கள் இந்திய டெஸ்ட் அணியில் பார்க்க முடியாது.

Pujara

அவருக்கு பதிலாக நிச்சயம் பிசிசிஐ அடுத்த திட்டத்தை தயார் படுத்தும். அதேபோன்று மற்றொரு சீனியர் வீரரான புஜாராவை ஒரு சில தொடர்களில் ஓய்வு கொடுத்து மீண்டும் அணிக்குள் கொண்டு வரவேண்டும். ஏனெனில் அவரை போன்ற ஒரு அனுபவ வீரரை நேரடியாக அணியிலிருந்து நீக்கினால் அவருடைய இடத்தை நிரப்பக்கூடிய வீரரை சரியாக தேர்வு செய்ய முடியாது.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு இலட்சம் ரசிகர்கள் முன்னாடி செய்ஞ்சி காட்டுங்க. இந்தியாவுக்கு போய் விளையாடுங்க – ஷாஹித் அப்ரிடி ஓபன்டாக்

எனவே மெதுவாக அவருக்கான மாற்றுவீரரை அணிக்குள் கொண்டு வந்து விட்டு அவரை வெளியேற்ற பார்ப்பார்கள். நிச்சயம் ரோஹித் மற்றும் புஜாரா ஆகியோருக்கு இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் எதிர்காலம் கடினமான ஒன்றுதான் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement