ஒரு இலட்சம் ரசிகர்கள் முன்னாடி செய்ஞ்சி காட்டுங்க. இந்தியாவுக்கு போய் விளையாடுங்க – ஷாஹித் அப்ரிடி ஓபன்டாக்

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கடந்த பல ஆண்டுகளாக சுமுக உறவு இல்லை என்கிற காரணத்தினால் இருநாட்டு அணிகளுக்கு இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது. அதோடு அவ்வப்போது ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே பொதுவான இடங்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான அணிகள் மோதிக் கொள்கின்றன.

INDvsPAK-1

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு பாகிஸ்தானில் ஆசிய கோப்பையும், இந்தியாவில் 50 ஓவர் உலகக் கோப்பையும் நடைபெற இருப்பதினால் இந்திய அணி பாகிஸ்தான் சென்று ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோன்று பாகிஸ்தான் அணி இந்தியா வந்து 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரானது திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் இந்தியா மோதும் போட்டிகள் இலங்கையில் நடக்கும் என்பது உறுதியாகி உள்ளது. அதனை தொடர்ந்து இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாடும் என்று கூறப்படுகிறது. ஆனால் எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பைத் தொடர் முழுவதும் இந்தியாவில் நடைபெற உள்ளதால் பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து விளையாட மாட்டோம் என்று தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி கூறுகையில் : அகமதாபாத்தில் சென்று விளையாட உங்களுக்கு என்ன தயக்கம் இருக்கிறது? ஏன் அங்கு சென்று விளையாட மறுக்கிறீர்கள்? அது என்ன நெருப்பால் நிறைந்த ஆடுகளமா? அல்லது பேய் பிசாசு ஏதாவது இருக்கிறதா? நிச்சயம் நீங்கள் அங்கு சென்று விளையாட வேண்டும்.

- Advertisement -

ஒரு லட்சம் ரசிகர்களுக்கு மத்தியில் உங்களுடைய திறனை வெளிக்காட்டி வெற்றி பெற்றால் அது நமது அணிக்கு தான் கௌரவம். மொத்தத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி தான் நமக்கு முக்கியம்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவுக்கு பதிலாக இந்தியாவின் டெஸ்ட் கேப்டனாக தகுதியான – 3 தரமான அனுபவ வீரர்களின் லிஸ்ட் இதோ

எனவே நிச்சயம் நீங்கள் இந்தியா சென்று அகமதாபாத் மைதானத்தில் விளையாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த கருத்து தற்போது இந்திய ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement