IND vs WI : 2 ஆவது டி20 போட்டியில் இஷான் கிஷனுக்கு பதில் அவரை ஓப்பனரா விளையாட வையுங்க – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இந்திய அணி நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று கயானா நகரில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் எந்தெந்த வீரர்கள் இடம்பெறப்போகிறார்கள் என்பது குறித்து எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் நிலவி வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் இஷான் கிஷன் துவக்க வீரராக இந்த போட்டியில் விளையாடக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால்-க்கு துவக்க வீரருக்கான வாய்ப்பினை அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து பேசிய வாசிம் ஜாபர் கூறுகையில் : ஒருநாள் கிரிக்கெட்டில் இஷான் கிஷன் தொடர்ச்சியாக 3 அரைசதம் அடித்து தன்னை நிரூபித்து இருந்தாலும் என்னை பொறுத்தவரை யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20 துவக்க வீரராக விளையாட வேண்டும்.

ஏனெனில் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை இஷான் கிஷன் சற்று மோசமாகவே விளையாடி வருகிறார். அவரது பார்ம் எனக்கு வருத்தத்தை தந்துள்ளது. கடைசியாக அவர் விளையாடிய 15 இன்னிங்ஸ்களில் ஒருமுறை கூட 40 ரன்கள் தொடரவில்லை. அதோடு அவரது ஸ்ட்ரைக் ரேட்டும் மிக குறைவாக உள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக டி20 கிரிக்கெட்டில் இஷான் கிஷனுக்கு பதிலாக ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பை வழங்க வேண்டும் என நினைக்கிறேன். ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரின் போது அச்சமற்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோன்று நிச்சயம் இந்திய அணிக்காகவும் அசத்துவார் என்று நம்புகிறேன். எனவே அவருக்கான வாய்ப்பை வழங்க வேண்டும் என வாசிம் ஜாபர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : பேருக்கு தான் சூப்பர்ஸ்டார் ஆனா நாக் அவுட் மேட்ச்சஸ்ல இந்தியாவ ஏமாத்திடுவாரு – நட்சத்திர வீரரை விமர்சித்த சல்மான் பட்

அவர் கூறியது போன்றே இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு சதம் உட்பட 163 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 625 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement