IND vs SL : 3வது டி20யில் தடுமாறும் கில்லுக்கு பதிலாக பார்முடன் பெஞ்சில் உள்ள அவருக்கு சான்ஸ் கொடுங்க – வாசிம் ஜாபர் கோரிக்கை

Shubman Gill Wasim Jaffer
- Advertisement -

2023 புத்தாண்டில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்ற இந்தியா 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்றது. அதனால் 1 – 1* என சமனில் இருக்கும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது போட்டி ஜனவரி 7ஆம் தேதியன்று இரவு 7:00 மணிக்கு ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. அதில் வென்று சொந்த மண்ணில் வலுவான அணி என்பதையும் உலகின் நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபித்து சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலை நிமிர ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் அணி போராட உள்ளது.

Shubman Gill 1

- Advertisement -

அதற்கு நிலைமை எப்படி இருந்தாலும் குறைந்தபட்சம் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவிக்க வேண்டியது கட்டாயமாகிறது. அந்த இடத்தில் இஷான் கிசான் 2வது போட்டியில் 2 ரன்னில் அவுட்டானாலும் முதல் போட்டியில் அதிரடியாக 37 ரன்கள் குவித்ததுடன் சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இரட்டை சதமடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். ஆனால் சமீப காலங்களில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அசத்தினார் என்பதற்காக டி20 கிரிக்கெட்டில் நம்பி வாய்ப்பு கொடுக்கப்பட்ட சுப்மன் கில் 7, 5 என 2 போட்டிகளிலுமே ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தார்.

ஜாபர் கோரிக்கை:
ஐபிஎல் தொடரிலும் பெரிய ரன்களை குவிக்கும் அவரால் அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாட முடிவதில்லை என்பது ஆரம்பம் முதலே பிரச்சனையாக உள்ளது. அதனாலேயே 2019இல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் இப்போது தான் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளார். ஆனால் அந்த வாய்ப்பில் ரொம்பவே சுமாராக செயல்பட்ட அவருக்கு பதில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் ருதுராஜுக்கு வாய்ப்பளிக்குமாறு முன்னாள் வீரர் வாஷிம் ஜாபர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Ruturaj gaikwad

குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் அடுத்தடுத்த சதங்களை அடித்து ஒரே ஓவரில் 7 சிக்ஸர்களை பறக்க விட்டு உலக சாதனை படைத்த அவருக்கு 3வது போட்டியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜாபர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “3வது போட்டியில் ருதுராஜ் கைக்வாட் வாய்ப்பு பெற வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் உள்ளூர் கிரிக்கெட்டில் நிறைய ரன்களை குவித்துள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பையில் அபாரமாக செயல்பட்டுள்ளார்”

- Advertisement -

“மறுபுறம் சுப்மன் கில் கடந்த 2 போட்டிகளில் நல்ல பார்மில் இருக்கிறேன் என்று காட்டவில்லை. அவர் நம்மை மிகவும் ஏமாற்றமடைய வைத்தார். எனவே ருதுராஜ் வாய்ப்பு பெறுவார் என்பதில் நான் உறுதியாக நம்புகிறேன். சொல்லப்போனால் சமீப காலங்களில் அவர் அதிகமாக பெஞ்சில் அமர்ந்து வருகிறார்” என்று கூறினார். முன்னதாக 2020 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஹாட்ரிக் ஆட்டநாயகன் விருதுகளை வென்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கவிருந்த சென்னையை காப்பாற்றிய ருதுராஜ் 2021 சீசனில் 635 ரன்கள் விளாசி ஆரஞ்சு தொப்பியை வென்று 4வது கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

Jaffer

அதனால் இந்திய அணிக்கு அறிமுகமான அவர் இதுவரை பெற்ற 9 டி20 போட்டிகளில் ஒரு அரை சதம் மட்டுமே அடித்து சுமாராகவே செயல்பட்டுள்ளார். இருப்பினும் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருப்பதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிக்குமாறு வாஷிம் ஜாபர் கூறியுள்ளார். அதே சமயம் கடந்த போட்டியில் நோ-பால்களை போட்டுத் தள்ளி தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக இருந்த அர்ஷிதீப் சிங்கை ஒரு மோசமான போட்டிக்காக நீக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்கIND vs SL : டி20 தொடரில் இருந்து வெளியேறிய பின்னர் சஞ்சு சாம்சன் போட்ட முதல் பதிவு – உங்களுக்கா இப்படி?

“பந்து வீச்சுத் துறையில் ஒரு மோசமான போட்டி அமைந்தாலும் அர்ஷிதீப் சிங்க்கு நான் ஆதரவு கொடுக்கிறேன். ஏனெனில் இது போன்ற கடினமான தருணங்களில் கொடுக்கும் ஆதரவு தான் அவரை மேற்கொண்டு உடைய வைக்காமல் வலுவானவராக மாற்றும். எனவே 3வது போட்டியில் பேட்டிங் துறையில் ருத்ராஜ் தவிர்த்து எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைக்கிறேன்” என கூறினார்.

Advertisement