
இந்திய கிரிக்கெட் அணி வரும் வரும் நவம்பர் – ஜனவரி வரை ஆஸ்திரேலியாவில் வரலாற்று சிறப்புமிக்க பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாட உள்ளது. பொதுவாகவே வேகத்துக்கு சாதகமான ஆஸ்திரேலியாவில் காலம் காலமாக இந்தியாவும் தோல்வியே சந்தித்து வந்தது. ஆனால் விராட் கோலி தலைமையில் ஆஸ்திரேலியாவை 2018/19 பார்டர் – காவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா வீழ்த்தியது.
அதனால் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணியாக இந்திய வரலாறு படைத்தது. அத்துடன் 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவிடம் 36க்கு ஆல் அவுட்டான இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால் அங்கிருந்து ரகானே மீண்டெழுந்து அபாரமாக விளையாடிய இந்தியா 2 – 1 (4) என்ற கணக்கில் கோப்பையை வென்றது.
2 இளம் வீரர்கள்:
அந்த வரிசையில் இம்முறை ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக டெஸ்ட் தொடரை வெல்ல சிராஜ், ஷமி, பும்ரா ஆகிய சீனியர்களுடன் அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங் யாதவ் ஆகிய 2 இளம் வீரர்களும் தேவை என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
“ஒருவேளை பும்ரா, சிராஜ், ஷமி ஆகியோர் பெரும்பாலான தொடரில் ஃபிட்டாக இருந்து விளையாடினால் ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் முறையாக தொடரை வெல்ல இந்தியாவுக்கு சிறந்த வாய்ப்புள்ளது. அர்ஷ்தீப் இடது கை ஆப்ஷனை கொண்டு வருவார். மயங் யாதவ் ஃபிட்டாகி விளையாட தயாராக இருந்தால் கருப்பு குதிரையாக இருப்பார்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக சமீபத்திய வருடங்களில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அசத்தி வரும் அர்ஷ்தீப் சிங் 2024 டி20 உலகக் கோப்பையில் 17 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் இந்தியா 17 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய அவர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாக வாய்ப்புள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகின. மறுபுறம் லக்னோ ஐபிஎல் அணியில் இந்த வருடம் மயங் யாதவ் 150 – 155 கி.மீ வேகத்தில் தொடர்ந்து வீசினார்.
இதையும் படிங்க: 2024 டி20 உ.கோ தொடரில் பாகிஸ்தான் ஃபிக்ஸிங் செய்து இந்தியா, அமெரிக்காவிடம் தோற்றதா? ஷான் மசூட் பதில்
அத்துடன் தனது முதல் 2 போட்டிகளிலேயே ஆட்டநாயகன் விருது வென்ற அவர் பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்றார். அதன் பின் காயத்தை சந்தித்த அவர் இன்னும் குணமாகவில்லை. ஒருவேளை அவர் குணமடைந்து பும்ரா, சிராஜ், ஷமி ஆகிய சீனியர்களுடன் இணைந்து விளையாடினால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று வாசிம் ஜாஃபர் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.