- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG :தோல்வி ஓகே தான். இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து செய்த சதிக்கு என்ன பதில், வெளியான அதிர்ச்சி தகவல்

இங்கிலாந்துக்கு எதிராக பர்மிங்காம் நகரில் நடைபெற்ற 5-வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் சேர்த்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 146 ரன்களும் பொறுமையாக பேட்டிங் செய்த ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் குவித்தனர்.

இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தரமான இந்தியாவின் பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் போன்ற முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சதமடித்த ஜானி பேர்ஸ்டோ 104 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

இந்தியாவின் சொதப்பல்:
அதனால் 132 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா அதுவரை போட்டியை தனது கட்டுக்குள் வைத்திருந்த நிலையில் 2-வது இன்னிங்சில் எழுச்சியடைந்ததை போல் அற்புதமாக பந்துவீசிய இங்கிலாந்திடம் வெறும் 245 ரன்களுக்கு சுருண்டு பின்னடைவை சந்தித்தது. விராட் கோலி, விகாரி உட்பட முக்கிய பேட்ஸ்மேன்கள் 2-வது வாய்ப்பிலும் சொதப்பிய நிலையில் அதிகப்பட்சமாக புஜாரா 66 ரன்களும் 57 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

இறுதியில் 378 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற நல்ல தொடக்கத்தை பெற்று மிரட்டிய போது லீஸ் 56, க்ராவ்லி 46, போப் 0 என 3 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து அவுட் செய்த இந்தியா பதிலடி கொடுத்தது. ஆனால் அடுத்து களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்த ஜோ ரூட் சதம் அடித்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ தனது பங்கிற்கு சதமடித்து 114* ரன்களும் குவித்து பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேஸிங் செய்து மிரட்டிய இங்கிலாந்து 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் எப்போதும் ராஜாதான் என நிரூபித்தது. மறுபுறம் அனுபவமில்லாத பும்ரா தலைமையில் முதல் 3 நாட்களில் அசத்திய இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் 15 வருடங்கள் கழித்து டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டது.

சுமாரான செயல்பாடு:
இப்போட்டியில் 2-வது இன்னிங்சில் சுமாரான பேட்டிங் அதைவிட மோசமான பவுலிங் இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியதை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் அனைத்து இந்திய ரசிகர்களும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால் இங்கிலாந்தின் இந்த அதிரடியான வெற்றிக்கு போட்டி நடைபெற்ற பர்மிங்காம் மைதான பராமரிப்பாளர்களும் முக்கிய பங்காற்றியுள்ளது நிறைய ரசிகர்கள் அறிந்திருக்க முடியாது. ஆம் முதல் இன்னிங்சில் வெறும் 284 ரன்களுக்கு சுருண்ட இங்கிலாந்து அதே பிட்சில் 2-வது இன்னிங்ஸ்சில் அசால்டாக 378 ரன்களை விளாசும் அளவுக்கு கடைசி இன்னிங்சில் பிட்ச் ஃப்ளாட்டாக மாற்றப்பட்டது.

- Advertisement -

பொதுவாகவே டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு நாள் தொடக்கத்திலும் இன்னிங்ஸ் பிரேக் சமயங்களிலும் மைதான பராமரிப்பாளர்கள் லைட் ரோலர் அல்லது ஹெவி ரோலரை கொண்டு மைதானத்தை சரி படுத்துவார்கள். அதில் கடைசி நாளில் பெரும்பாலும் லைட் ரோலரை தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் ஹெவி ரோலரை பயன்படுத்தினால் பிட்ச் கடினமாகி தார்ரோடு போல மாறி பேட்டிங்க்கு சாதகமாகி விடும். அதுபோன்ற மறைமுகமான சதிதான் இப்போட்டியில் நடந்தேறியுள்ளது.

அம்பலமான மாற்றம்:
பொதுவாக இன்னிங்ஸ் பிரேக் சமயத்தில் பேட்டிங் செய்யப்போகும் அணிக்கு எந்த ரோலரை பயன்படுத்தலாம் என்று கேட்கும் உரிமை உள்ளது. ஆனால் போட்டியை சமநிலையுடன் நேர்மையுடன் விளையாட நினைக்கும் எந்த அணியும் “ஒன்று எந்த ரோலரும் வேண்டாம் அல்லது லைட் ரோலரை மட்டும் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்வதே” வழக்கமாகும்.

- Advertisement -

இருப்பினும் இப்போட்டியில் கடைசி நாளில் ஹெவி ரோலரை பயன்படுத்துமாறு பராமரிப்பாளர்களுக்கு இங்கிலாந்து நிர்வாகம் அறிவுறுத்தியது. அதை அவர்களும் கச்சிதமாக செய்ததாலேயே 5-வது நாளில் பிட்ச் கொஞ்சம் கூட சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாமில்லாமல் போனதற்கு காரணமாகும்.

இதை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தனது டுவிட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார். போதாக்குறைக்கு இந்திய பவுலர்களின் சுமாரான பந்து வீச்சு முரட்டுத்தனமான பார்மில் இருக்கும் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவுக்கு பிளாட்டான பிட்ச்சில் அல்வா போல் அமைந்ததால் இந்தியாவுக்கு வரலாற்று தோல்வி கிடைத்தது.

இதையும் படிங்க : IND vs ENG : தோல்விக்கு நீங்களே பொறுப்பு, இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்த 5 முக்கிய வீரர்கள் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

இதனால் தோல்வியை ஒப்புக் கொண்டாலும் அடுத்த முறை இன்னும் சற்று நேர்மையுடன் விளையாடி வெற்றி பெறுமாறு இங்கிலாந்தை இந்திய ரசிகர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

- Advertisement -
Published by