மீண்டும் வம்பிழுத்த மைக்கல் வாகன், வீடியோ போட்டு வெறித்தனமாக கலாய்த்த வாசிம் ஜாபர் – தொடரும் கலாட்டா

vaughan
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் டாப் 2 அணிகளாக திகழும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டிகள் பரபரப்பாக இருப்பது போலவே அந்த 2 அணிகளை சேர்ந்த முன்னாள் வீரர்கள் வாசிம் ஜாஃபர் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் சமூக வலைதள பக்கமான ட்விட்டரில் பரபரப்பாகும் மோதிக் கொள்வது ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் நேரங்களில் மட்டுமல்லாது உலக அளவில் அவ்விரு அணிகள் மற்ற அணிகளுடன் மோதும் போதும் இருவரும் டுவிட்டரில் மோதிக் கொள்வார்கள்.

அதில் குறிப்பாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் இந்தியாவையும் வாசிம் ஜாபரையும் வேண்டுமென்றே கலாய்க்கும் வகையில் ட்வீட் போடுவார். அதற்கு சாதுரியமாக திரும்ப பேசவே முடியாத அளவுக்கு கிண்டலடித்த மைக்கேல் வாகன் முகம் சோர்ந்து போகும் அளவுக்கு வாசிம் ஜாஃபர் பதிலடி கொடுப்பது வழக்கமாகும். அந்த வகையில் டாம் அண்ட் ஜெர்ரி போல கலகலப்பாக மோதிக் கொள்ளும் இவர்களில் கடைசியில் பெரும்பாலும் ஜெர்ரி போல வாசிம் ஜாபர் தான் சாதுரியமாக வெற்றி பெறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக சமீபத்தில் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது 2007 டெஸ்ட் தொடரில் பகுதி நேர பவுலரான தமிடம் அவுட்டான ஒருவரை இன்று பேட்டிங் பயிற்சியாளராக பார்ப்பதெல்லாம் காலக்கொடுமை என்ற வகையில் மைக்கேல் வாகன் வேண்டுமென்றே வம்பிழுத்தார். அதற்கு பிரபல “பர்னோல்” மருந்தை உங்களது வயிற்று எரிச்சலுக்கு போட்டுக் கொள்ளுமாறு வாசிம் ஜாபர் பதிலடி கொடுத்தது மிகவும் பிரபலமானது. அந்த நிலையில் தற்போது ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் முதல் நாளிலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 506 ரன்கள் குவித்து இரட்டை உலக சாதனைகள் படைத்தது.

வீடியோ பதிலடி:
ஆனால் கடந்த 2007ஆம் ஆண்டே இதை விட தரமான பவுலர்களை கொண்ட பாகிஸ்தானுக்கு எதிராக கொல்கத்தா மைதானத்தில் விளையாடிய வாசிம் ஜாபர் முதல் நாளிலேயே 192 ரன்கள் குவித்து அடுத்த நாளில் இரட்டை சதமடித்து 202 ரன்களில் அவுட்டானார். மொத்தம் 34 பவுண்டரிகளுடன் அற்புதமாக விளையாடிய அந்த இன்னிங்ஸ் வீடியோவை பிரபல கிரிக்கெட் வல்லுனர் ஜூஹைப் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அது ரசிகர்களால் வைரலான நிலையில் அந்த வீடியோவை பார்த்த மைக்கேல் வாகன் “வேகப்பந்து வீச்சாளர்களை அற்புதமாக எதிர்கொண்ட உங்களை ஏன் அவர்கள் (பாகிஸ்தான்) ஆஃப் ஸ்பின்னரை பயன்படுத்தி அவுட்டாக்கவில்லை” என்று நேரடியாக வாசிம் ஜாஃபரை டேக் செய்து வழக்கம் போல வம்பிழுத்தார்.

- Advertisement -

அதற்கு ஒரு சிறிய குழந்தை உயரமாக இருக்கும் குளிர்சாதன பெட்டியில் இருக்கும் திண்பண்டங்களை நாற்காலி போட்டு எற முயற்சித்தும் கடைசி வரை தோற்ற வீடியோவை கையிலெடுத்து பதிவிட்ட வாஷிம் ஜாஃபர் “ட்விட்டரில் என்னை மைக்கேல் வாகன் இப்படித்தான் கலாய்க்க முயற்சிக்கிறார். அவரது விடாமுயற்சியை ரசிக்க வேண்டும்” என்று வழக்கம் போல தக்க பதிலடி கொடுத்தார்.

அதனால் வழக்கம் போல பேச முடியாமல் மைக்கேல் வாகன் எந்த பதிலும் கொடுக்காமல் அமைதியானார். இப்போது மட்டுமில்லாமல் கடந்த பல வருடங்களாக இதே போல் பல முறை பல்வேறு நிகழ்வுகளுக்காக இந்த இருவரும் இப்படி டுவிட்டரில் நேருக்கு நேர் மோதிக்கொண்டாலும் எப்போதும் அந்த மோதல் வரம்பு மீறாமல் சண்டைகளாக மாறாமல் விளையாட்டாகவே உள்ளது.

அதனால் இப்போதெல்லாம் இவர்கள் ட்விட்டரில் இது போல் மோதும் போது அதை சண்டையாக பார்க்காத ரசிகர்கள் ஜாலியாக பார்த்து அடுத்ததாக இவர்கள் எப்போது மோதிக் கொள்வார்கள் என்று காத்திருக்கிறார்கள். அந்த வகையில் கலகலப்பை தொடர காத்திருக்கும் அவர்களில் தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வரும் வாசிம் ஜாபர் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப் அணி சார்பில் பேட்டிங் பயிற்சியாளர் என்ற முறையில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement