IND vs SA : 50 வருட ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக ரசிகர்கள் சந்தித்த அரிதான நிகழ்வு – கலாய்த்த வாசிம் ஜாபர்

INDvsRSA
- Advertisement -

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றது. அதில் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் போராடி 2 – 1 என்ற கணக்கில் தோற்ற அந்த அணி ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் அற்புதமாக செயல்பட்ட இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சமனடைந்த அத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 27.1 ஓவரில் 99 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குயின்டன் டி காக் 6, ஜானெமன் மாலன் 15, ஹென்றிக்ஸ் 3, மார்க்ரம் 9, டேவிட் மில்லர் 7 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக ஹென்றிச் க்ளாஸென் 4 பவுண்டரியுடன் 34 (42) ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

பரிதாப தோல்வி:
அதை தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் 8 (12) ரன்களில் அவுட்டாகி அடுத்து களமிறங்கிய இஷான் கிசான் 10 (18) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றளித்தார். இருப்பினும் மறுபுறம் அசத்திய மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் வெற்றியை உறுதி செய்த போது 8 பவுண்டரியுடன் 49 (57) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் 28* (23) ரன்களை அதிரடியாக குவித்ததால் 19.1 ஓவரிலேயே 105/3 ரன்களை எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமலேயே தென் ஆப்பிரிக்காவை 2 – 1 (3) என்ற கணக்கில் மீண்டும் தோற்கடித்த இளம் இந்திய அணி சொந்த மண்ணில் தங்களை கில்லி என நிரூபித்து கோப்பையை வென்றது.

அப்படி தோல்வியுடன் இந்த சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த தென்ஆப்பிரிக்கா வரலாற்றில் முதல் முறையாக ரசிகர்களுக்கு ஒரு அரிதான நிகழ்வை நிகழ்த்தி விட்டு நாடு திரும்பியுள்ளது. அதாவது இத்தொடரில் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட தெம்பா பவுமா லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் லேசாக காயமடைந்ததால் ராஞ்சியில் நடைபெற்ற 2வது போட்டியில் துணை கேப்டன் கேஷவ் மஹராஜ் கேப்டனாக செயல்பட்டார். அந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற 3வது போட்டியில் பவுமா முழுமையாக குணமடையாத நிலையில் கேசவ் மகாராஜ் சற்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விலகினார்.

- Advertisement -

அதன் காரணமாக நம்பிக்கை நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் 3வது போட்டியில் கேப்டனாக செயல்பட்டார். கடந்த 1971ஆம் ஆண்டு முதல் கடந்த 51 வருடங்களாக நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்படி 3 போட்டிகள் கொண்ட ஒரு தொடரின் 3 போட்டிகளிலும் 3 வெவ்வேறு வீரர்கள் ஒரு அணியை கேப்டனாக வழி நடத்துவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 1902ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் இதேபோல் 3 வெவ்வேறு கேப்டன்களை தென் ஆப்பிரிக்கா முதல் முறையாக பயன்படுத்தியது.

அதன்பின் கடந்த 1930ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 வெவ்வேறு கேப்டன்களை 4 போட்டிகளில் பயன்படுத்தியது. அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட அப்படி ஒரு நிகழ்வு நடைபெறாத நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது நடந்துள்ளதால் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு தொடரில் 3 கேப்டன்களை பயன்படுத்திய முதல் அணி என்ற வித்தியாசமான பெயரையும் தென் ஆப்பிரிக்கா பெற்றுள்ளது.

இதையும் படிங்க: IND vs RSA : இவங்களா பி டீம். இன்னைக்கு பாத்தீங்களா ஆட்டத்தை – சாதனையுடன் முடித்த இந்திய அணி

இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் இந்திய கேப்டன் ஷிகர் தவானுடன் டாஸ் வீசுவதற்கு 3 வெவ்வேறு தென்னாப்பிரிக்க வீரர்கள் வந்தனர். அதை ஜாலியாக முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் ஒரு பிரபல பாலிவுட் நடிகர் தனது ரசிகர்களை கூப்பிட்டு கூப்பிட்டு புகைப்படம் எடுத்துக் கொள்ளும் ஒரு பழைய வீடியோவை பதிவிட்டு கலாய்த்துள்ளார்.

Advertisement