IND vs WI : வெ.இ அணிக்கெதிரான 3 ஆவது போட்டி தான் அவருக்கு லாஸ்ட் சேன்ஸ் – இந்திய வீரருக்கு வாசிம் ஜாபர் வார்னிங்

Wasim-Jaffer
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் வேளையில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இதனால் நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற இருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

IND-vs-WI

- Advertisement -

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இடம் பெற்று விளையாடி வரும் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான சூரியகுமார் யாதவிற்கு நாளை நடைபெறயிருக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி தான் கடைசி வாய்ப்பாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் அவரை எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சூரியகுமார் யாதவ் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வாய்ப்பினை பெறுவார். ஆனால் அதுதான் அவரது கடைசி வாய்ப்பாக இருக்கும்.

ஏனெனில் கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற பேட்ஸ்மேன்கள் அணிக்குள் வந்துவிட்டால் சூரியகுமார் யாதவால் அணியில் நீடிக்க முடியாது. அதே போன்று ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் பேட்டிங் செய்யும் விதம் அதிக ஆபத்தான வகையில் இருக்கிறது. அதாவது அவர் ஒவ்வொரு இரண்டாவது பந்திற்கும் பவுண்டரியை எதிர்நோக்கி விளையாடுகிறார். ஒருநாள் போட்டியில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க முயற்சித்தால் எளிதாக விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.

SKY

எனவே அவரால் இந்த டெக்னிக்கை வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் நீடிக்க முடியுமா? என்று தெரியவில்லை. சூரியகுமார் யாதவ் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு ஏற்றார் போன்று அவரது பேட்டிங் ஸ்டைலை நிச்சயம் மாற்ற வேண்டும். 50 ஓவர் கிரிக்கெட்டில் அதிகமாக பவுண்டரிகளை அடிக்க ஆசைப்பட்டு தூக்கி அடிக்க நினைத்தால் அது எந்த அளவிற்கு பலன் அளிக்கும் என்பது தெரியவில்லை,

- Advertisement -

அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் டி20 போலவே பேட்டிங் செய்ய விரும்புகிறார். அதன் காரணமாகவே அவர் தொடர்ச்சியாக தனது விக்கெட்டுகளை எளிதாக இழந்து வருகிறார் என்று வாசிம் ஜாஃபர் கூறினார். அவர்கூறியது போலவே 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் பார்ட்னர்ஷிப் என்பது முக்கியம். அதிலும் ரன்களை குவிக்கும்போது அதிகப்படியான ரிஸ்க் எடுக்காமல் ரன்களை குவிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.

இதையும் படிங்க : IND vs WI : 3 ஆவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – உத்தேச பட்டியல் இதோ

டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கும் சூரியகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியான தடுமாற்றத்தையே சந்தித்து வருவதால் நிச்சயம் அவருக்கு 50 ஓவர் உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement