இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவடைந்துள்ள வேளையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பதன் காரணமாக இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர் மத்தில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
ஏனெனில் இரண்டாவது போட்டியின் போது முக்கிய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டதாலே இந்திய அணி தோல்வியை சந்தித்தது என்று விமர்சனங்கள் எழுந்த வேளையில் மூன்றாவது போட்டிக்கான இந்திய அணியில் என்னென்ன மாற்றங்கள் இருக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கப்போகும் இந்த முக்கியமான போட்டிக்கு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்புவார்கள் என்று உறுதியாக கூறப்படுகிறது.
அதோடு கடந்த போட்டியில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சன் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் வெளியேற்றப்பட்டு மீண்டும் முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே அணியே இந்த இறுதி போட்டியில் விளையாடும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் விளையாடுவார்கள். மூன்றாவது இடத்தில் விராத் கோலியும், நான்காவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷனும் விளையாடுவார்கள்.
ஐந்தாவது இடத்தில் ஹார்டிக் பாண்டியாவும், ஆறாவது இடத்தில் சூரியகுமார் யாதவும் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது, அதேபோன்று சுழற்பந்து வீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவும், வேகப்பந்து பேச்சாளர்களாக ஷர்துல் தாகூர், உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி நாளைய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :
இதையும் படிங்க : Ashes 2023 : ஆஸியின் சரித்திர வெற்றிக்கு குறுக்கே மழை? தனது குரு மெக்கல்லம் சாதனையை உடைத்த – ஸ்டோக்ஸ் புதிய உலக சாதனை
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 4) இஷான் கிஷன், 5) ஹார்டிக் பாண்டியா, 6) சூரியகுமார் யாதவ், 7) ரவீந்திர ஜடேஜா, 8) ஷர்துல் தாகூர், 9) குல்தீப் யாதவ், 10) உம்ரான் மாலிக், 11) முகேஷ் குமார்.