IND vs WI : இதெல்லாம் சரியே இல்ல. தேர்வுக்குழுவை கண்டித்து இளம்வீரர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பிய – வாசிம் ஜாபர்

Wasim-Jaffer
- Advertisement -

இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி இருக்கிறது.

Umesh-Yadav

- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் முடிந்து நடைபெற இருக்கும் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியை நேற்று முன்தினம் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ வெளியிட்டது.

அதில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோருக்கு இடம் கிடைக்காமல் போனது. அதோடு முகமது ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வேகபந்து வீச்சாளர்களான நவ்தீப் சைனி மற்றும் முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

abhimanyu easwaran 1

இந்நிலையில் ரஞ்சி டிராபி மற்றும் உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடிய அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான், பிரியங்க் பஞ்சால் போன்ற வீரர்களுக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைக்காதது அனைவரும் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து தேர்வு குழுவினரை விமர்சிக்கும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சில கேள்விகளை முன் வைத்துள்ளார்.

- Advertisement -

அதன்படி வாசிம் ஜாபர் கூறுகையில் : இந்திய அணிக்கு தற்போது நான்கு துவக்க வீரர்கள் தேவையா? உள்நாட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சர்பராஸ் கானை மிடில் ஆர்டரில் தேர்வு செய்திருக்கலாமே? என்று கேள்வி எழுப்புள்ளார்.

இதையும் படிங்க : TNPL 2023 : டாப்பர் அஸ்வின் அணியை சரவெடியாக அடித்து நொறுக்கிய சாய் சுதர்சன் – கோவை மாஸ் வெற்றி பெற்றது எப்படி?

அதோடு அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால் போன்ற வீரர்கள் ரஞ்சி மற்றும் இந்திய ஏ அணிகளுக்காக மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறும் வாய்ப்புக்காக நீண்ட காலமாக காத்திருக்கும் அவர்களை விடுத்து ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து தவறு என்றும் வாசிம் ஜாபர் சாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement