IND vs NZ : இந்த நியூசிலாந்து தொடர்ல அவங்க 2 பேரை தவிர வேறயாரும் சரியா ஆடல – வாசிம் ஜாபர் கருத்து

- Advertisement -

கடந்த பல ஆண்டுகளாகவே இந்திய அணியால் ஐசிசி நடத்திவரும் கோப்பைகளை கைப்பற்ற முடியவில்லை என்கிற காரணத்தினால் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பையை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் பல மாற்றங்களை செய்து தற்போது ஒருநாள் அணியை பலமாக கட்டமைத்து எதிர்வரும் உலக கோப்பையை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரை இந்திய அணி விளையாடி முடித்துள்ளது.

Shubman Gill Ishan Kishan

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியானது அடுத்ததாக தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த தொடரில் ஏற்கனவே முதல் இரண்டு ஆட்டங்கள் நிறைவடைந்த வேளையில் இந்திய அணி இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியானது நாளை ஜனவரி 24-ஆம் தேதி இந்தூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

Rohit sharma IND vs NZ

இந்நிலையில் இந்த ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய பேட்ஸ்மேன்கள் குறித்த தனது ஆதங்கத்தை முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் வெளிப்படுத்தியுள்ளார். இது குறித்த அவர் கூறுகையில் :

- Advertisement -

இந்த நியூசிலாந்து தொடரில் குறிப்பாக சுப்மன் கில், விராட் கோலி போன்ற வீரர்கள் மட்டுமே ரன்களை குவித்து வருகின்றனர். ஆனால் இனிவரும் போட்டிகளில் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் போன்ற வீரர்கள் கொஞ்சமாவது பொறுப்புடன் விளையாட வேண்டும். ஏனெனில் தனிப்பட்ட நபர்களால் வெற்றி கிட்டுவது நிலைக்காது. எனவே அனைவரது பங்களிப்பும் அவசியம் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : 3 ஆவது போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றங்கள் – என்னென்ன தெரியுமா?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ரோகித் சர்மா சதம் அடித்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய பேட்டிங்கில் நாம் இன்னும் மூன்று இலக்க ரன்களை பார்க்க முடியவில்லை இதையெல்லாம் உணர்ந்து அனைவரும் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement