துவண்டு கிடந்த இந்திய அணியை சாம்பியன் அணியாக மாற்றியவர் இவர்தான் – வாசிம் ஜாபர் புகழாரம்

jaffer6
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் துவக்க வீரராக டெஸ்ட் அணியில் விளையாடி வந்த ஜாபர் துவக்கத்தில் சிறப்பாக விளையாடினாலும் அதன்பிறகு மந்தமான ஆட்டம் காரணமாக இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.

Jaffer 1

- Advertisement -

ஆனால் தனது 41-வது வயதில் வயது வரை அதாவது கடந்த ஆண்டு வரை ரஞ்சி போட்டிகளில் விளையாடிய வாசிம் ஜாபர் கடந்த ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார். மேலும் ரஞ்சிப் போட்டியில் அதிக ரன்கள் குவித்த சாதனையாளர் என்ற பெயருடன் அவர் கிரிக்கெட்டில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொடர்ந்து விதர்பா அணிக்காக விளையாடி வந்த அவர் அந்த அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக தற்போது உருவெடுத்துள்ளார். இந்நிலையில் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்தும் அதில் கற்றுகொண்ட அனுபவத்தை குறித்தும் பேட்டியளித்த வாசிம் ஜாபர் இந்தியாவின் முன்னேற்றம் குறித்தும் சில கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது :

Ganguly

2000 ஆவது ஆண்டில் இந்திய அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பி சரியான திசையில் செல்ல முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கங்குலி தான் மேலும் இந்திய அணியை சிறப்பாக கட்டமைத்து எதிர் அணிகளை பயமுறுத்தும் வகையில் இந்திய அணியை தயார் செய்தது கங்குலி தான் என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் கங்குலியின் தலைமையில் சேவாக் துவக்க வீரராக மாற்றப்பட்டார். அதுமட்டுமின்றி இளம் வீரர்களான ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், கைப், ஜாஹீர் கான் மற்றும் தோனி போன்ற பல சிறப்பான வீரர்களை அவர் உருவாக்கியுள்ளார். அதுமட்டுமின்றி தற்போது உள்ள கேப்டன்கள் போல ஒரு வீரர் சிறப்பாக விளையாட வில்லை என்றால் அவரை உடனடியாக அணியில் இருந்து நீக்கியது கிடையாது.

Ganguly

இளம் வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தி பெரிய வீரராக மாற்றியது கங்குலிதான் என்று ஜாபர் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றவர் கங்குலி தான் என்று கூறிய ஜாபர் தற்போதைய ஒயிட்பால் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விராத் கோலியே சிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement