8.25 கோடி குடுத்து எடுத்த அவருக்கு ஏன் வாய்ப்பே தரமாட்றீங்க? – மும்பை அணியை விளாசிய வாசிம் ஜாபர்

Jaffer
Advertisement

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக பார்க்கப்படும் மும்பை இந்தியன்ஸ் அணியானது இம்முறை நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரிலும் தங்களது ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மும்பை அணிக்கு பலம் சேர்த்த பல வீரர்களை அவர்கள் இழக்க நேர்ந்தால் இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி பெரிய சிக்கலை சந்தித்து வருகிறது என்றே கூறலாம்.

ஏனெனில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள 5 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள அவர்கள் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளனர். அதோடு கடைசியாக நடைபெற்று முடிந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 199 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணியானது கிட்டதட்ட வெற்றிக்கு அருகில் சென்று 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

இந்த தோல்வி ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் மும்பை அணியின் வீரர்கள் தேர்வு குறித்து தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது காட்டமான அதிருப்தியினை அவரது டுவிட்டர் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் :

8.25 கோடி கொடுத்து ஒரு வீரரை வாங்குகிறீர்கள் என்றால் நிச்சயம் அவருக்கு கூடுதலான வாய்ப்பை வழங்கி இருக்க வேண்டும். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஏன் மும்பை அணி அவரை களமிறக்கவில்லை என்று தெரியவில்லை? அதை நினைத்தால் எனக்கு வியப்பாக இருக்கிறது என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

சிங்கப்பூரை சேர்ந்த கிரிக்கெட் வீரரான டிம் டேவிட் அதிரடி கிரிக்கெட்டிற்கு பெயர் போனவர். உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளில் அதிபயங்கரமான அதிரடி ஆட்டக்காரர் விளங்கி வரும் இவருக்கு இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் 40 லட்சம் ரூபாய் அடிப்படை விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் 2 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா படைத்த புதிய சாதனை – விவரம் இதோ

ஆனால் அவரை வாங்க அனைத்து அணிகளும் போட்டா போட்டி போட்டதன் காரணமாக இறுதியில் அவரது விலை கோடிகளில் எகிறியது. இறுதியில் 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலத்தில் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement