போன வருஷம் ராகுல் அதிரடி மிஸ் ஆனதுக்கு காரணம் இவர்தான். ஆனா இந்தமுறை மிஸ் ஆகாது – பேட்டிங் பயிற்சியாளர் பேட்டி

Rahul
- Advertisement -

இந்தியாவில் வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி முதல் மே மாதம் இறுதி வரை 14-வது ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இந்தியா முழுவதும் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடையே இந்த தொடர்பு பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்த கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ipl trophy

- Advertisement -

இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளரான வாசிம் ஜாபர் இந்த தொடர் குறித்தும் இந்த தொடரில் அதிக ரன்கள் குவிக்கும் வீரர் குறித்தும் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ராகுல் கடந்த சீசனில் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருந்தார். ஏனெனில் மிடில் ஆர்டரில் போதிய அளவிற்கு வீரர்கள் தங்களது அதிரடியை வெளிப்படுத்தவில்லை. குறிப்பாக மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடியை வெளிப்படுத்தி இருந்தால் அது ராகுலுக்கு பக்கபலமாக இருந்து இருக்கும். ஆனால் மேக்ஸ்வெல் ஆட்டம் கடந்த ஆண்டு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதால் ஆரம்பத்தில் இருந்தே ராகுல் அதிரடியான ஆட்டத்தை விளையாட முடியாமல் நிதானமாக ஆடி வந்தார்.

ஆனால் இம்முறை மிடில் ஆர்டரில் கவனம் செலுத்தி முக்கிய வீரர்கள் பலர் அணியில் எடுத்திருப்பதால் துவக்கம் முதலே ராகுல் இந்த தொடரில் அதிரடியாக ரன்களை குவிப்பார். எதிர் அணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அவர் அமைவார் என நான் கருதுகிறேன். மேலும் இம்முறையும் அதிக ரன்களை குவித்து இந்த தொடரில் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்குவார் என்பதில் சந்தேகம் இல்லை என வாசிம் ஜாபர் கூறினார்.

Rahul

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசன் 14 போட்டிகளில் விளையாடி இருந்த ராகுல் 670 ரன்கள் அடித்து அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் முக்கிய வீரர்களை பல கோடி கொடுத்து எடுத்திருந்தும் அவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை ராகுல் மட்டுமே இறுதி வரை சிறப்பாக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement