ரஞ்சிக் கோப்பை சாதனை…18,000 ரன்கள்…40 வயது…ஜாபரை உள்ளூர் கிரிக்கெட்டின் ராகுல் ட்ராவிட் என்றே கூறலாம்

jaffer6
- Advertisement -

சேவக், கம்பீர் காலத்துக்கு முன்னாள் இந்தியா சோதித்துப் பார்த்த பல தொடக்க ஆட்டக்காரர்களில் கொஞ்சம் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் இவர்தான். சர்வதேசப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் பாட்ஷாவாகவே வலம் வந்தார். வாசிம் ஜாபர் – முதல்தர கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர்.
jaffer2

அவருக்கு அப்போது வயது 15 இருக்கும். அந்தச் சிறு வயதில், பள்ளி கிரிக்கெட் அணிக்காக 400 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று அவருக்கு வயது 40. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னும், அதே ஆச்சர்யத்தை தன் பேட்டிங் திறமையால் ஏற்படுத்தியுள்ளார். `முதல் தர கிரிக்கெட்டின் ரன் மெஷின்’ என்று அழைக்கப்படுகிறார். கிளாஸாக ஆடி 40 வயதில் இரட்டைச் சதம் அடிக்கிறார். உண்மையில் வாசிம் ஜாபர் ஒரு `வாவ்’ வீரர்தான்.

- Advertisement -

18 வயதில், இவருக்கு முதல் தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டாவது போட்டியிலேயே மும்பை அணிக்காக முச்சதம் விளாசினார் ஜாபர். 2008 ஐ.பி.எல் டி-20 போட்டியின்போது பெங்களூரு அணியை டெஸ்ட் கிரிக்கெட் அணி என்று விமர்சித்தனர். ஏனெனில், அந்த அணியில் டிராவிட்டுக்கு இணையாக தனது க்ளாஸிக் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜாபர்.

jaffer

முதல் தரப் போட்டிகளில், 53 சதங்கள்,8 இரட்டைச் சதங்கள், 50+ சராசரி,ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர் என்று பல சாதனைகளைக் கையில் வைத்துள்ள ஜாபர், மீதமுள்ள சாதனைகளை விரைவில் நிச்சயம் தகர்ப்பார். இந்திய அணிக்காக ஆடும்போது கொடுத்த வாய்ப்புகளில் தவறினாரே தவிர, உள்ளூர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராகவே வலம் வந்தார். தொடக்க ஆட்டக்காரர் டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு ஜாபர் சிறந்த உதாரணம். ஜாபரை உள்ளூர் கிரிக்கெட்டின் ராகுல் ட்ராவிட் என்றே கூறலாம்.

jaffer3

Advertisement