என்னுடைய கணிப்பின் படி கோலி ஓய்வுக்கு முன் இத்தனை சதங்கள் அடிப்பார் – வாசிம் ஜாபர்

Jaffer
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக ஆடி ஒருநாள் போட்டியில் தனது 42வது சதத்தை பதிவு செய்தார். இந்த சதத்திற்கு அவர் ஐந்து மாதங்களாக காத்திருந்தார். ஏனெனில் வழக்கமாக சதங்களை விளாசி தள்ளும் கோலி கடந்த 5 மாதங்களாக 11 போட்டிகளில் சதம் எடுக்காமல் ஆடி வந்தார்.

- Advertisement -

உலகக்கோப்பை தொடரில் அவர் ஐந்து அரைசதங்கள் அடித்தாலும் சதம் அடிக்க முடியாமல் இருந்ததனால் இந்த 42 வது சதத்தை கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்நிலையில் விராட் கோலியின் இந்த சதம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் வாசிம் ஜாபர் குறிப்பிட்டதாவது :

விராட் கோலி தனது வழக்கமான சேவையை தொடங்க ஆரம்பித்துவிட்டார். 11 இன்னிங்ஸ் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சதம் அடித்த விராட் கோலி என்னுடைய கணிப்பின்படி இவர் 75 முதல் 80 சதம் வரை ஒருநாள் போட்டிகளில் அடிப்பார் என்று பதிவிட்டுள்ளார்.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் கோலி ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டிய சாதனை யாதெனில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கங்குலியை கடந்து தற்போது அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார். மொத்தம் 11406 ரன்களை 238 போட்டிகளில் கோலி குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement