டெஸ்ட் போட்டிகளில் இனி இவர்தான் இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் – வாசிம் ஜாபர் பாராட்டு

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது நேற்று சட்டகிராம் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் முதல் இன்னிங்க்ஸை விளையாடி முடித்துள்ள இந்திய அணியானது 404 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

KL Rahul Shakib Al Hasan

- Advertisement -

இந்திய அணி சார்பாக புஜாரா 90 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 86 ரன்களையும், அஸ்வின் 58 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் பங்களாதேஷ் அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெடுகளை இழந்து 133 ரன்கள் மட்டுமே எடுத்து 271 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது முதலில் இன்னிங்சில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்கவே ஒரு கட்டத்தில் 112 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

அப்போது அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்த புஜாரா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 149 ரன்கள் சேர்த்து இந்திய அணியை நல்ல ரன் குவிப்புக்கு அழைத்துச் சென்றனர். இறுதி நேரத்தில் அஷ்வினும் ரன்களை குவிக்க இந்திய அணி ஒரு டீசன்டான ரன் குவிப்பை வழங்கியது. இந்நிலையில் இந்த போட்டியில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் நேர்த்தியாக விளையாடி 86 ரன்கள் எடுத்து இந்திய அணியை மோசமான நிலையில் இருந்து மீட்டெடுத்தார்.

Shreyas Iyer

அவரது இந்த சிறப்பான ஆட்டம் பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை பெற்ற வேளையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாஃபரும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

- Advertisement -

சர்வதேச போட்டிகளில் மிகவும் குறைவான போட்டிகளையே தற்போது ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடி வருகிறார். ஆனாலும் தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளையும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வரும் அவர் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சிறப்பாக விளையாடிய வருவது பாராட்டக்கூடிய ஒன்றுதான். ஏனெனில் உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்திய கிரிக்கெட் அணியை அவர் ஆபத்திலிருந்து மீட்டெடுத்துள்ளார்.

இதையும் படிங்க : வீடியோ : ரொம்ப தேங்க்ஸ் தம்பி, ஓவர் தன்னம்பிக்கையால் பல்ப் வாங்கிய வங்கதேசம் – தண்டனை கொடுத்த அம்பயர்

அதுமட்டும் இன்றி அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் விதம் உண்மையிலேயே மிகச் சிறப்பாக இருக்கிறது. அதோடு சுழற்பந்து வீச்சாளர்களை அவர் கையாளும் விதம் மிக அற்புதமாக இருப்பதால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரே அடுத்த சூப்பர் ஸ்டார் என வாசிம் ஜாபர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement