- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் வேண்டாம்.. ஜெய்ஸ்வாலுடன் அவரை ஓப்பனிங்கில் இறக்குங்க.. காரணத்துடன் வாசிம் ஜாஃபர் தேர்வு

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதைத் தொடர்ந்து ஜூன் 2ஆம் தேதி இந்தியா தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. அதன் பின் முதன்மை சுற்றில் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இந்த தொடரில் துவக்க வீரராக ரோகித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் களமிறங்குவார் என்று நம்பப்படுகிறது. ஏனெனில் ரோகித் சர்மா வலது கை பேட்ஸ்மேனாக இருக்கும் நிலையில் ஜெய்ஸ்வால் இடது கை வீரராக இருக்கிறார். எனவே எதிரணியை திணறடிப்பதற்காக ஓப்பனிங்கில் வலது – இடது கை கொண்ட ஜோடியை இந்தியா களமிறக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

அதிரடி தேர்வு:
இருப்பினும் ரோஹித் சர்மாவுடன் விராட் கோலியை களமிறக்குமாறு சௌரவ் கங்குலி போன்ற சில முன்னாள் வீரர்கள் தெரிவித்திருந்தனர். ஏனெனில் 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 741 ரன்கள் அடித்த அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே ஆரம்பத்திலேயே ரோஹித் – விராட் ஆகிய 2 தரமான அனுபவ வீரர்கள் எதிரணிகளைப் பந்தாடுவது இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுக்கும் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக விராட் கோலியை துவக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் வாஷிம் ஜாஃபர் வித்தியாசமான கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் 3, 4வது இடத்தில் களமிறங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலி மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் உலகக் கோப்பையில் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும். நாம் பெறும் துவக்கத்தை வைத்து ரோகித் சர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் 3 மற்றும் 4வது இடத்தில் சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்யலாம். ஏனெனில் ரோஹித் சர்மா சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்”

இதையும் படிங்க: விவாகரத்து குறித்த வதந்திகள் பரவிவரும் வேளையில் அமெரிக்க சென்றதும் – ஹார்டிக் பாண்டியா பகிர்ந்த பதிவு

“எனவே 4வது இடத்தில் அவர் விளையாடுவது பிரச்சினையாக இருக்காது” என்று கூறினார். அதாவது வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் அங்கே ரோகித் சர்மா 3 அல்லது 4வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடுவது இந்தியாவுக்கு நன்மையை கொடுக்கும் என்று வாசிம் ஜாஃபர் தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்தியாவின் செட்டிலான பேட்டிங் வரிசை மாற்றப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -