ஆல்டைம் பெஸ்ட் ஒருநாள் சர்வதேச அணியை தேர்வு செய்த வாசிம் ஜாபர் – பாண்டிங்கே சப்ஸ்டியூட் தானம் – 11 வீரர்கள் அணி இதோ

- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும் உள்ளூர் தொடரில் ஜாம்பவானாக ஜொலித்தவருமான வாசிம் ஜாபர் சர்வதேச ஒருநாள் அணியை தேர்வு செய்துள்ளார். இந்த அணியில் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கிறது . குறிப்பாக மிகச்சிறந்த கேப்டனாக திகழ்ந்த ரிக்கி பாண்டிங்கிற்கே இந்த அணியில் இடமில்லை. அவரையே மாற்று வீரராக வைத்துள்ளார் வாசிம் ஜாபர்.

- Advertisement -

கரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரரும் உள்ளூர் போட்டிகளில் ஜாம்பவானான வாசிம் ஜாபர் ஆல்டைம் மிகச் சிறந்த சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணியை தேர்வு செய்துள்ளார் .

இந்த அணியில் துவக்க வீரர்களாக 2 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் துவக்க வீரர்களாக இருக்க மூன்றாம் வரிசையில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் களமிறங்குகிறார். நான்காவது வரிசையில் இந்திய அணியின் கேப்டனும் சமகால தலைச்சிறந்த கிரிக்கெட் வீரரான விராட் கோலி இருக்கிறார்.

dhoni

அடுத்ததாக தென்னாப்பிரிக்காவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர் டிவில்லியர்ஸ் இருக்க, ஆல்-ரவுண்டராக இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார் . விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டனாக இந்தியாவின் தலை சிறந்த கேப்டன் தோனியை தேர்வு செய்துள்ளார் . வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் மற்றும் கிளன் மெக்ராத் ஆகியோர் இருக்கின்றனர் .

- Advertisement -

மேலும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜோயல் கார்னர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார் .
சுழற்பந்து வீச்சாளராக ஷேன் வார்னே அல்லது சக்லைன் முஷ்டாக் ஆகிய இருவரில் ஒருவர் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார் .

ponting

இதில் ஆச்சரியமாக 12 ஆவது வீரராக ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக இவர் 2003 மற்றும் 2007ம் ஆண்டுகளில் உலக கோப்பை தொடரை வென்று கொடுத்த வெற்றிகரமான கேப்டன் ஆவார்.

Advertisement