INDvsNZ : ஷிகார் தவான் எடுத்த அந்த தவறான முடிவு தான் மோசமான தோல்விக்கு காரணம் – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer
- Advertisement -

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது தற்போது அங்கு நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நவம்பர் 25-ஆம் தேதி ஆக்லாந்து நகரில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஷிகர் தவான், சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரது அரைசதம் காரணமாக 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் குவித்தது.

பின்னர் 307 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய நியூசிலாந்து அணியானது துவக்கத்தில் 88 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தாலும் அதன் பின்னர் எந்த விக்கெட்டையும் இழக்காமல் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47.1 ஓவரில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 309 ரன்கள் குவித்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய டாம் லேதம் 145 ரன்களும், கேன் வில்லியம்சன் 94 ரன்களும் குவித்து நியூசிலாந்து அணியை அபாரமான வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணி 300-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தும் இந்த போட்டியில் தோல்வியை தழுவியது பலரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோன்று இந்த தோல்விக்கான காரணம் குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாஃபர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய அணி செய்த தவறு குறித்த தெளிவான விளக்கத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த பதிவில் :

நியூசிலாந்து வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினார்கள். 300 ரன்களுக்கு மேல் கொண்ட இந்த இலக்கினை 270 ரன்கள் போன்று காட்டினார்கள். வில்லியம்சன் எப்பொழுதும் போல கிளாஸான ஒரு இன்னிங்ஸை விளையாடினார். ஆனால் டாம் லேதம் இந்த போட்டியில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மனதையும் திருடிவிட்டார். துவக்க வீரராக விளையாடிய ஒருவர் இப்படி கீழ் வரிசையில் சிறப்பாக விளையாடுவது கடினமான ஒன்று.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி 5 பந்து வீச்சாளர்களுடன் மட்டுமே களமிறங்கியதுதான் இந்திய அணி செய்த தவறு என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவின் மூலம் வாசிம் ஜாபர் குறிப்பிடுவது யாதெனில் : எப்பொழுதுமே ஆறாவது பவுலிங் ஆப்ஷன் கிரிக்கெட்டில் மிகவும் முக்கியம் ஆனால் இந்த போட்டியில் தவான் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என 5 பவுலர்களை மட்டுமே விளையாட வைத்தார்.

இதையும் படிங்க : அவருக்கு இன்னும் எவ்ளோ சேன்ஸ் குடுத்தாலும் வேஸ்ட் தான். அவரை முதல்ல தூக்குங்க – ரித்தீந்தர் சிங் கருத்து

பந்துவீசத் தெரிந்த பேட்ஸ்மேன் இந்த அணியில் இல்லை. தீபக் ஹூடாவை சேர்த்து இருந்தால் கூட ஆறாவது பவுலிங் ஆப்ஷன் கிடைத்திருக்கும். இப்படி ஆறாவது பவுலரை அணியில் சேர்க்காததே இந்திய அணி பெற்ற மோசமான தோல்விக்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement