- Advertisement -
இந்திய கிரிக்கெட்

12784 கி.மீ.. 2023 உ.கோ 9க்கு 9 மைதானம்? அப்போ எங்க போனீங்க.. இந்தியாவை விமர்சித்த ஹுசைனுக்கு ஜாபர் பதிலடி

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களது போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அங்கே இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் விளையாடிய இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து அணியை தங்களது கடைசிப் போட்டியில் இந்தியா சந்திக்க உள்ளது.

முன்னதாக பாதுகாப்புக்கு பிரச்சனைகளால் கடந்த 2008க்குப்பின் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா மொத்தமாக நிறுத்தியுள்ளது. அதே போல இம்முறையும் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்பாததால் இந்தியாவின் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்று ஐசிசி அறிவித்தது. ஆனால் ஒரே ஹோட்டலில் தங்கி, ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத சாதகத்தை கொடுப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் மைக்கேல் ஆதர்டன், நாசர் ஹுசைன் சமீபத்தில் விமர்சித்தார்கள்.

- Advertisement -

9 போட்டிக்கு 9 மைதானம்:

இந்நிலையில் அவர்களுக்கு முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த நபர்களை மகிழ்ச்சியடைய வைப்பதற்காகவே ஐசிசி இந்திய அணியின் ஒரு போட்டியை சார்ஜாவிலும் மற்றொரு போட்டியை அபுதாபியிலும் விளையாட வைத்து ஒரு ஹோட்டலுக்கும் இன்னொரு ஹோட்டலுக்கும் அலைய வைத்திருக்க வேண்டும்”

“அப்படி செய்திருந்தால் இந்த விமர்சனம் வந்திருக்காது. அரசின் தலையீடு மற்றும் அரசியல் காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லவில்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமக்கு என்ன வாய்ப்புகள் இருக்கிறது? அதாவது நமக்கு இந்தியா – பாகிஸ்தான் எப்படியாவது விளையாட வேண்டும். இந்தியா இல்லாமல் இது போன்ற பெரிய தொடர் நடப்பது நன்றாக இருக்காது”

- Advertisement -

12784 கிலோ மீட்டர்:

“எனவே இவை அனைத்தையும் தவிர்க்க இந்திய அணி அபுதாபி, சார்ஜாவில் விளையாடி இந்த விமர்சனங்களை நிறுத்தியிருக்க வேண்டும். 2023 உலகக்கோப்பையில் இந்தியா தங்களது 9 லீக் போட்டிகளை 9 வெவ்வேறு மைதானங்களில் விளையாடியது. ஒரே மைதானத்தில் 2 போட்டிகளை கூட விளையாடவில்லை. ஆனால் அதைப்பற்றி இந்தியா எதுவுமே சொல்லவில்லை. அதே போல பாகிஸ்தானும் நிறைய போட்டிகளை ஹைதராபாத் நகரில் விளையாடியது”

இதையும் படிங்க: மகளிர் ஐபிஎல்: 125 ரன்ஸ்.. பழைய ஃபார்முக்கு திரும்பிய ஆர்சிபி? ஹாட்ரிக் தோல்வியால் நெருக்கடியான பிளே ஆஃப்

“வங்கதேசமும் கொல்கத்தாவில் விளையாடியது. இங்கிலாந்து போன்ற மற்ற அணிகளும் அடுத்தடுத்தப் போட்டிகளை ஒரே மைதானத்தில் விளையாடியது. ஆனால் இந்தியா விளையாடவில்லை. அதைப் பற்றி நாங்கள் எதுவுமே பேசவில்லை. உண்மையில் எங்கே விளையாடினாலும் நீங்கள் கோப்பையை வெல்வதற்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல 2023 உலகக்கோப்பையில் 35 நாட்களில் இந்திய அணி 12874 கிலோமீட்டர் பயணித்து வெவ்வேறு மைதானங்களில் விளையாடிய போது இதே விமர்சகர்கள் அமைதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -