நல்லா விளையாடினாலும் சஞ்சு சாம்சனை இந்திய அணி டிராப் பண்ண இதுதான் காரணம் – வாசிம் ஜாபர் கருத்து

Wasim-Jaffer-and-Samson
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்திய அணியானது அடுத்ததாக ஹார்டிக் பாண்டியாவின் தலைமையில் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்ற டி20 தொடரை ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து ஷிகார் தவான் தலைமையிலான இந்திய ஒருநாள் அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தின் டி20 தொடரில் இடம் பெற்றிருந்த சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படாதது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் போது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை அவர் சிறப்பாக பயன்படுத்தி இருந்தாலும் நேற்று ஹேமில்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவரை மீண்டும் இந்திய அணி கழட்டி விட்டது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் விவாதிக்கப்படும் விடயமாக மாறியுள்ளது. இப்படி சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணி அவரை மீண்டும் மீண்டும் அணியிலிருந்து கழட்டிவிட என்ன காரணம் என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் சஞ்சு சாம்சன் ஏன் இப்படி இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டு வருகிறார் என்பது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள அந்தக் கருத்தில் குறிப்பிடப்பட்டதாவது : சஞ்சு சாம்சன் மிகச்சிறப்பாக விளையாடியும் அவர் அணியிலிருந்து கழட்டிவிடப்பட காரணம் யாதெனில் : அணியில் தேவையான அளவு ஆல்ரவுண்டர்கள் மற்றும் பார்ட் டைம் பந்து வீசும் பேட்ஸ்மேன்கள் இல்லை என்பது மட்டும்தான். இந்திய அணி தற்போது நல்ல ஆல்ரவுண்டர் மற்றும் பார்ட் டைமர்களை எதிர்பார்க்கிறது.

டீமின் பேலன்ஸ்ஸை சமன் செய்யவே தொடர்ந்து சஞ்சு சாம்சனை இந்திய அணி நீக்கி வருவதாக எனக்கு தெரிகிறது. ஏனெனில் இந்திய அணியின் டாப் 5 வீரர்களில் யாரையும் அணியிலிருந்து நீக்க முடியாது. ஓப்பனர்களாக தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நன்றாக விளையாடுகிறார்கள். மூன்றாவது வீரராக ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடி வருகிறார்.

- Advertisement -

நான்காவது இடத்தில் சூரியகுமார் யாதவை நீக்குவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேபோன்று ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் துணைக்கேப்டனாகவும் இருப்பதால் அவரையும் நீக்க முடியாது. எனவே ஆறாவது இடத்தில் விளையாடும் சஞ்சு சாம்சனை தான் ஆல்ரவுண்டருக்காக நீக்க முடியும். அதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வருகிறார்.

இதையும் படிங்க : சச்சின், சேவாக்கை எல்லாம் தாண்டி இந்திய ஓப்பனராக அபார சாதனை படைத்த – சுப்மன் கில் (விவரம் இதோ)

எது எப்படி இருப்பினும் ஹார்டிக் பாண்டியாவோ அல்லது ரவீந்திர ஜடேஜாவோ மீண்டும் அணிக்கு திரும்பினால் சஞ்சு சாம்சன் வழிவிட்டே தான் ஆகவேண்டும். ஏனெனில் ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் விளையாடுவது அத்தியாவசியமான ஒன்று என வாசிம் ஜாஃபர் தனது கருத்தினை கூறியுள்ளார்.

Advertisement