சச்சின், சேவாக்கை எல்லாம் தாண்டி இந்திய ஓப்பனராக அபார சாதனை படைத்த – சுப்மன் கில் (விவரம் இதோ)

Shubman-Gill-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் துவக்க வீரராக வாய்ப்பினை பெற்ற சுப்மன் கில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆக்லாந்து நகரில் கடந்த 25-ஆம் தேதி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின் போது அரை சதம் அடித்து அசத்திய அவர் நேற்று நடைபெற்ற ஹாமில்டன் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 45 ரன்கள் குவித்து அசத்து இருந்தார். 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சுப்மன் கில் விளையாடிய போது நியூசிலாந்தில் தான் அறிமுகமானார்.

Shubman Gill

- Advertisement -

அந்த வகையில் தற்போதும் நியூசிலாந்து நாட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் எதிர்கால இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக தனது இடத்தினை உறுதி செய்யும் வகையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகப்படியான வாய்ப்புகளை பெற்று வரும் இவர் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறார்.

அதோடு துவக்க வீரராக தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே ரோகித் சர்மா மற்றும் தவானுக்கு பிறகு இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரராக இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது என்று பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்த 2022-ஆம் ஆண்டு மட்டும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதம் என 625 ரன்கள் குவித்திருக்கிறார்.

Shubman Gill

அதோடு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய துவக்க வீரராக யாரும் படைக்காத சாதனையை செய்துள்ளார். அந்த வகையில் துவக்க வீரராக இந்திய அணிக்காக விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் அடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அணிக்காக துவக்க வீரராக சுப்மன் கில் விளையாடிய முதல் 10 இன்னிங்ஸ்களில் 495 ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக சச்சின் துவக்க வீரராக முதல் 10 இன்னிங்ஸ்களில் 478 ரன்களையும், ராகுல் டிராவிட் 463 ரன்களையும், ஷிகார் தவான் 432 ரன்களையும், சேவாக் 425 ரன்கள் அடித்திருக்கின்றனர்.

இதையும் படிங்க : வாய்ப்பில்லை ராசா – 2022 டி20 உலகக்கோப்பையுடன் கேரியரில் கடைசியாக விளையாடினார்கள் என கருதப்படும் 3 இந்திய வீரர்கள்

இந்நிலையில் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சுப்மன் கில் 14 இன்னிங்ஸ்களில் 674 ரன்கள் குவித்து மிகச் சிறப்பான துவக்க வீரராக மாறியுள்ளார். அதோடு முதல் 14 இன்னிங்ஸ்களில் இந்திய அணிக்காக அதிக ஸ்கோர் அடித்தவர்களின் பட்டியலிலும் ஷ்ரேயாஸ் ஐயரை (634) அவர் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement